அனைத்து ரயில்களிலும் 6 அன்ரிசர்வ்டு பெட்டிகள்... பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
அனைத்து ரயில்களிலும் 6 முன்பதிவு அற்ற பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று குமரி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பெருகிவரும் மக்கள் தொகை மக்களின் போக்குவரத்து தேவைக்கு ஏற்ப இந்தியா முழுவதும் வருடம் தோறும் சுமார் 100 சாதாரண எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் பாஸ்ட் புதிய வழித்தடங்களில் ரயில்களை அறிவித்து இயக்க வேண்டும்.
முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் அறிவித்த திட்டத்தின் படி அனைத்து ரயில்களிலும் 6 முன்பதிவு அற்ற பெட்டிகள் இணைக்க வேண்டும். இவ்வாறு வருடத்துக்கு 100 தினசரி ரயில்கள் இயக்கத்துக்கு தேவையான ரயில் பெட்டிகள் தேவைக்கு ஏற்ப தயாரிப்பதற்கு புதிய ரயில் பெட்டி தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும்.

வருடம் தோறும் சுமார் 100 ரயில்களை இயக்க தேவையான பராமரிப்பு பிட்லைன்கள், நடைமேடைகள். ஸ்டேபளிங்லைன்கள் இந்தியா முழுவதும் அதிக அளவில் வருடம் தோறும் அமைக்க வேண்டும். அதிக அளவில் ரயில்களை இயக்க தேவையான இருப்புபாதைகள், இருவழிப்பாதையாக மாற்றம் செய்தல், மூன்று வழிபாதைகள், நான்கு வழி பாதைகள் என்று அமைக்க வேண்டும். இந்த திட்டம் தற்போது ஓரளவுக்கு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னை, பெங்களுர், மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற பெருநகரங்களில் அதிக ரயில்கள் இயக்குவதற்கு ஏற்ப புதிய முனையங்கள் அடுத்த 100 ஆண்டுகள் பயன்படும் வகையில் அமைக்க வேண்டும். இவ்வாறு வருடம் தோறும் புதிய ரயில்களை இயக்கும் போது அதற்கு தேவையான அளவில் ஊழியர்கள் தேவைப்படுவார்கள். இதனால் ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே ஊழியர்கள் தேர்வு ஆணையம் வழியாக நியமிக்க வேண்டும்.

ரயில் நிலையங்களை அழகுபடுத்துதல் என்று மக்கள் வரிப்பணத்தை செலவு செய்வதை நிறுத்தி அதிக அளவு பணத்தை அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அமைக்க செலவு செய்ய வேண்டும். ரயில்வேயில் உள்ள செலவை குறைக்கும் வகையில் தற்போது உள்ள ரயில்வே மண்டலங்களின் எண்ணிக்கை 8 முதல் 10 ஆகவும், கோட்டங்களின் எண்ணிக்கை 40 ஆகவும் குறைக்க வேண்டும். ரயில்வே வாரியத்தில் பணிபுரியும் அதிகாரிகள் எண்ணிக்கையை பகுதியாக குறைக்க வேண்டும்.
அல்லது ரயில்வே வாரியத்தை கலைத்துவிட்டு மத்திய அரசின் மற்ற துறைகள் இருப்பது போன்ற குறைந்த அளவு அதிகாரிகளை வைத்து ரயில்வேயை நிர்வகிக்க வேண்டும். இது போன்ற ஆக்க பூர்வ செயல்களில் ரயில்வே அமைச்சர் போர்கால நடவடிக்கையாக அதிரடியாக செயல்பட வேண்டும் என்று குமரி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
