தூக்கத்திலேயே ஷாப்பிங்... விநோத நோயால் ரூ 3,00,000 தொலைத்த பெண்!

 
கெல்லி

 தூக்கத்திலேயே உளறுபவர்கள் இங்கு பலர். இவர்கள் பகல் நேரத்தில் கடுமையாக உணர்ச்சிகளால் பாதிக்கப்பட்டால் இரவு உளறல் இருக்கும். சிலர் தூக்கத்தில் நடக்கும் வியாதியும் இருக்கும். ஆனால் ஒரு பெண்மணி தூக்கத்தில் எழுந்து ஷாப்பிங் சென்று விடுகிறார். இங்கிலாந்தில் 42 வயதான  கெல்லி கிநைப்ஸ்  என்ற பெண் வசித்து வருகிறார். இவர் தூக்கத்தில் தன்னை அறியாமலேயே தேவையில்லாத பொருட்களை ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.  இதனால் கெல்லி கிநைப்ஸ்க்கு இதுவரை ரூ3 லட்சம் கடனும் ஏற்பட்டுள்ளது.  இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான கெல்லி வருத்தத்துடன்  மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து பார்த்தார். அப்போது அவருக்கு பாராசோம்னியா என்ற அரியவகை நோய் இருப்பதாக தெரிந்தது.  

கெல்லி
இந்த நோய் இருப்பவர்கள் தூக்கத்தில் சுயநினைவு இல்லாமலே பேசுவது, நடப்பது, சாப்பிடுவது  போன்ற  செயல்களில் ஈடுபடுவார்கள். தூக்கத்தின் போது மூளையின் ஒரு பகுதி மட்டும் செயல்படுவதால் இது நடக்கிறது. ஒரு படி மேலே போய் கெல்லி ஷாப்பிங் செய்துவிட்டார். தூக்கத்தில் கெல்லி ஆன்லைனில் பெயிண்ட் வாளிகள், பிளாஸ்டிக் நெட், புத்தகங்கள், விளையாட்டு பொருட்கள் பிரிட்ஜ், மிட்டாய், மேசை என தேவை இல்லாத பொருட்களை வாங்கிவிட்டார்.  

ஆன்லைன்
ஆன்லைனில் ஏற்கனவே கெல்லியின் வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் கிரெடிட் கார்டு தகவல்கள் பதிவாகியிருப்பது தான் விஷயமே . இவர் ஷாப்பிங் செய்ததும்  ஆட்டோமேட்டிக்காக பணம் சென்று விடுகிறது. தனிப்பட்ட வங்கி விவரங்களை தூக்கத்தில் யாருக்காவது அவர் ஷேர் செய்து விடுகிறார். இதனால் மோசடி ஏற்படும் அபாயமும் இருப்பதாக கெல்லி வேதனையுடன் தெரிவித்துள்ளார். கெல்லி 3 குழந்தைகளின் தாய். இவருக்கு முதல் குழந்தை 2018ல் பிறந்த போதிருந்து கெல்லி இந்த பிரச்சனையை சமாளித்து வருகிறார்.  மருத்துவ சிகிச்சை பெற்றும் அதனால் பெரிய பலன்கள் ஏற்படவில்லை என்கிறார் கெல்லி.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web