ஸ்மால்-கேப் மியூச்சுவல் ஃபண்ட்... இந்த 5 ஷேர்களும் எகிறுது... உங்க லிஸ்ட்ல இருக்கா?

 
ஸ்மால் கேப்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை.இப்படிப்பட்ட விளம்பரத்தை அடிக்கடி தொலைக்காட்சிகளில் நீங்கள் கண்டிருக்க நேரலாம் ஏன் ? முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை மியூச்சுவல் ஃபண்ட் ஹவுஸில் முதலீடு செய்கிறார்கள், அவர்கள் அந்த பணத்தை பங்குச்சந்தைகளில் முதலீடு செய்கிறார்கள். நீங்கள் செய்யும் முதலீடு அதிகரிக்கலாம் அல்லது குறையலாம் என்பதை கணிப்பதற்கு வழி இல்லை. ஏனென்றால் சந்தையை துல்லியமாக கணிக்க முடியாததால் எந்த முதலீடும் ஆபத்து இல்லாதது என்று சொல்ல முடியாது. இருப்பினும் முதலீட்டாளர் சரியாக கையாள்வார்கள் என்பதால் மேற்கண்ட முதல் வரியை சொல்கிறார்கள் சரியாக சொல்வதானால் பொறுப்பு துறப்பு இருப்பினும் கீழ்கண்ட  ஐந்து பங்குகளில் குவாண்ட் அதிக அளவில் முதலீடு செய்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐடிசி, ஆர்பிஎல் வங்கி  மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி  (PNB)

குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட்களின் வளர்ச்சியில் போர்ட்ஃபோலியோவில் முதல் 5 பங்குகளின் ஹோல்டிங்ஸ் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்... ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) 8.66 சதவிகிதம்  HDFC வங்கியில் 7.91 சதவிகிதம் ஐடிசியில்  5.47 சதவிகிதம் RBL வங்கியில் 4.46 சதவிகிதம் பஞ்சாப் நேஷனல் வங்கி 3.83 சதவிகிதம் SMC குளோபல் செக்யூரிட்டீஸ் லிமிடெட் வாராந்திர அறிக்கையின்படி, குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட்-வளர்ச்சித் திட்டம் ஒரு வருடம், மூன்று ஆண்டுகள் மற்றும் ஐந்து ஆண்டுகளில் முறையே 27.80  சதவிகித வளர்ச்சியும், 63.70 சதவிகித வளர்ச்சியும், மற்றும் 24.40 சதவிகித வளர்ச்சியும் கண்டு வருமானத்தை அளித்துள்ளது.

ரூபாய் பணம் 500

குவாண்ட் ஸ்மால்-கேப் மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் அக்டோபர் 29, 1996 இல் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து 10.70 சதவிகித வருமானத்தை அளித்துள்ளது. குவாண்ட் ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிக ஏற்றத்துடன் இருக்கும் முதல் 5 பங்குகள் வழங்கும் வருமானத்தைப் பார்ப்போம்...

ரிலையன்ஸ்  இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) :

இன்டெக்ஸ் ஹெவிவெயிட் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வியாழக்கிழமை சந்தை மூலதனத்தில் ரூபாய் கிட்டத்தட்ட 17 டிரில்லியனைத் தாண்டியது. RIL பங்குகள் மூன்று ஆண்டுகளில் 69 சதவிகித லாபம் கொடுத்தன. கடந்தள் ஒரு வருடத்தில் 6 சதவிகிதம் எதிர்மறையான வருமானத்தைக் கொடுத்திருக்கின்றன.

ஹெச்டிஎஃப்சி வங்கி (HDFC) :

பிஎஸ்இ இணையதளத்தில் உள்ள தரவுகளின்படி, HDFC வங்கி பங்குகள் ஒரு வருடத்தில் 16 சதவிகித வருமானத்தையும் மூன்று ஆண்டுகளில் 69 சதவிகித  வருமானத்தையும் அளித்திருக்கின்றன.

ஐடிசி (ITC):

சிகரெட் முதல் ஹோட்டல் வரை கூட்டு நிறுவனமான ஐடிசியின் பங்குகள் புதன் அன்று ஒரு புதிய உச்சத்தை எட்டியது, தொடர்ச்சியாக ஒன்பதாவது அமர்வாக தொடர்ந்து உயர்ந்தது. ஆனால் நேற்றைய நாளில் 1.24 சதவிகிதம் குறைந்து முடிந்தது. ஐடிசி பங்குகள் ஒரு வருடத்தில் 64 சதவிகித வளர்ச்சியையும் மூன்று ஆண்டுகளில் 125 சதவிகிதம் உயர்ந்து நட்சத்திர வருமானத்தையும் அளித்துள்ளது.

பஞ்சாப் நேஷ்னல் வங்கி (PNB) :

பஞ்சாப் நேஷனல் வங்கியின் சந்தை மூலதனம் ரூபாய் 56937.96 கோடி மற்றும் வங்கிப் பங்குகள் ஒரு வருடத்தில் 64 சதவிகித வருமானத்தையும் மூன்று ஆண்டுகளில் 92 சதவிகித வருமானத்தை BSE இணையதளத்தின்படி வழங்கியுள்ளது.

மியூட்சுவல்

RBL வங்கி :  

இந்த வங்கிப் பங்குகள் ஒரு வருடத்தில் 43 சதவிகிதமும், மூன்று வருடங்களில் 93 சதவிகித வருமானத்தையும் அளித்துள்ளன.

இது தவிர, நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட், எச்டிஎஃப்சி ஸ்மால் கேப் ஃபண்ட், எச்எஸ்பிசி ஸ்மால் கேப் ஃபண்ட் மற்றும் ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் ஸ்மால்கேப் ஃபண்ட் ஆகியவை கடந்த மூன்று ஆண்டுகளில் அற்புதமான வருமானத்தை அளித்த மற்ற ஸ்மால்-கேப் ஃபண்டுகளாக திகழ்கின்றன.

Nippon India Small Cap Fund - Reg - Growth 50.60 சதவிகிதம்

HDFC ஸ்மால் கேப் ஃபண்ட் 48.10 சதவிகிதம்

HSBC Small Cap Fund - Reg - Growth 47.60 சதவிகிதம்

ஐசிஐசிஐ புருடென்ஷியல் ஸ்மால்கேப் ஃபண்ட் - வளர்ச்சி 47.50 சதவிகிதம், ஸ்மால் கேப் ஃபண்டுகள் அதிக அபாயத்துடன் தொடர்புடையவை. ஒரு சந்தையில், ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்ட் திட்ட நிதிகள் கடுமையாகப் பாதிக்கப்படலாம் இருப்பினும், இந்த நிதிகளால் கணிசமான வருமானத்தை உருவாக்க முடியும் ஆனால் அதற்கு பண்ட் மேனேஜரை நீங்கள் தேர்வு செய்வதைப்பொறுத்து லாப நட்டம் அமையும் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். சந்தையை தொடர்ந்து கவனிக்க முடியாதவர்கள் ஸ்மால்-கேப் மியூச்சுவல் ஃபண்டுகளில் உங்களின் முதலீட்டை உங்கள் தகுதிக்கு ஏற்றார்போல குறைந்த பட்சம் ஐந்தாண்டுகள் மாதா மாதம் முதலீடு செய்து வந்தால் நல்ல பலன் கிட்டும்!

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web