இல்லத்தரசிகளுக்கு அடுத்த அதிர்ச்சி.. வெங்காயம் கிடுகிடு விலை உயர்வு...

தமிழகத்தில் வெங்காயம் அதிகம் சாகுபடி செய்யப்படுவது தர்மபுரி மாவட்டத்தில் தான் . இங்கிருந்து தான் தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு வெங்காயம் அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, கேரளா பகுதிகளுக்கு காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் சின்ன வெங்காயம் அதிக விளைச்சல் இல்லாததால் வரத்து குறைந்துள்ளது. இதனால் கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பிற மாவட்டங்களில் இருந்து சின்ன வெங்காயம் வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்தது. குறிப்பாக தக்காளி கிலோ ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது.
அதே போல் சின்ன வெங்காயமும் கிலோ ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் இருந்தும் சின்ன வெங்காயம் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப் பட்டது. இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்திலும் திருச்சி, பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் இருந்தும் சின்ன வெங்காயம் வரத்து வர தொடங்கியதால் விலை குறைந்து 1 கிலோ சின்னவெங்காயம் ரூ.30 வரை விற்பனை ஆனது.
இந்த நிலையில் சின்ன வெங்காயத்தின் வரத்து தற்போது குறைவாக இருப்பதால் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதாவது கடந்த இரண்டு வாரமாக ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.75-க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை உயர்வு காரணமாக விற்பனையும் குறைந்து காணப்பட்டது.
தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று சின்ன வெங்காயம் கிலோ ரூ. 78-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து அதே விலையில் நீடித்து வருகிறது. இந்த நிலையில் சின்ன வெங்காயம் வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டத்திலிருந்து வருவது குறைந்து உள்ளதால், சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் ரூ.32-க்கு விற்பனை செய்யப்பட்ட பல்லாரி வெங்கயம் தொடர்ந்து விலையேற்றமாக உள்ளது நேற்று முன்தினம் ரூ. 48-க்கும் நேற்று ரூ. 50-க்கும் இன்று ரூ. 52-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!