மாஸ்... 20000 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட்போர்டு வகுப்பறைகள்!

 
ஸ்மார்ட் போர்ட்

 தமிழகம் முழுவதும்  கோடை விடுமுறை முடிவடைந்து அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்  பள்ளிகள் திறக்கும் நாளில் புத்தகங்கள், சீருடை வழங்க அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் இருந்தன. தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வித்திறனை அரசுப் பள்ளிகளில் கொண்டு வர தமிழக அரசு  பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் 20,000 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் பிராட்பேண்ட் இளையதள வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன என  பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஸ்மார்ட் போர்டு

அத்துடன்  மேல்நிலை மற்றும் உயர்நிலை அரசு பள்ளிகளில் 6,992 உயர்தர ஆய்வகங்கள் அமைக்கப்படுவதாகவும் மாணவர்களுக்கு கற்றுத் தரும் திறனை மேம்படுத்தும் வகையில்  79,500 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்த அறிவிப்பால் மாணவர்கள்,ஆசிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.நடப்பு கல்வி ஆண்டில் 220 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரை ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்பு,  9ம் வகுப்பு  முதல்  12 ம் வகுப்பு  வரை உள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி பாட வேலையும் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.  இதன் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக  பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web