நாளை முதல் பொது இடங்களில் புகைப்பிடிக்கத் தடை!

பிரான்ஸ் நாட்டில் பொதுவெளிகளில் புகைப்பிடிப்பதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரான்ஸ் நாட்டை பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் 200க்கும் மேற்பட்டோர் புகையிலை தொடர்பான நோயால் உயிரிழப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் கேத்தரின் தெரிவித்துள்ளார்.
France has announced a nationwide ban on smoking at beaches, parks, and outside schools, effective July 1, to protect children’s health. Cafe terraces and e-cigarettes are exempt. This follows a similar measure by the UK last year.#France #SmokingBan #PublicHealth pic.twitter.com/0GkJCjcCAR
— DD News (@DDNewslive) May 30, 2025
இதனால் ஆண்டுக்கு சுமார் 75,000 உயிரிழப்புக்கள் ஏற்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. எனவே புகைப்பிடிப்பதை கட்டுப்படுத்தும் வகையில் அதற்கு தடை விதிப்பதற்கு அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.
ஏற்கனவே உணவகங்கள், பார்கள் மற்றும் பொதுக் கட்டிடங்ளில் புகைப்பிடிப்பது சட்டவிரோதமானது என அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் பள்ளிகள், பூங்காக்கள் மற்றும் கடற்கரை அருகே புகைப்பிடிப்பதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையானது நாளை மறுநாள் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரான்ஸ் அரசு நேற்று வெளியிட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!