1500 கிலோ சந்தன கட்டை கடத்தல்... சுற்றி வளைத்த போலீசார்!

 
1500 கிலோ சந்தன கட்டை கடத்தல்... சுற்றி வளைத்த போலீசார்!

ஈரோட்டில் இருந்து சேலத்திற்கு 1.5 டன் சந்தன கட்டை கடத்திய கேரளா கும்பல் கைது செய்யப்பட்டு, சந்தன கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

சேலம் மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு சந்தன கட்டைகள் வாகனங்களில் கடத்தப்படுவதாக மாவட்ட வன அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பெயரில் சேர்வராயன் தெற்கு வன சரகர் தலைமையிலான தனிப்படையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி மகுடஞ்சாவடி நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர் 

அப்போது ஈரோட்டில் இருந்து சேலத்திற்கு வந்த வேன் ஒன்றி நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சாக்கு முட்டைகள் இருந்தது. அதனைப் பிரித்து பார்த்த போது, உள்ள சந்தன கட்டைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.  இது தொடர்பாக வேன் ஓட்டி வந்த கேரளாவைச் சேர்ந்த முகமது சுகேல் மற்றும் உடன் வந்த முகமது பசீலுர் ரகுமான் ஆகியோரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்களை வன சரக்கு அலுவலகத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினார். 

இதில் சந்தன கட்டைகளை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து வேனுடன் சேர்த்து 1.5 டன் எடையுள்ள சந்தன கட்டைகளை பறிமுதல் செய்தனர்

விசாரணையில் இந்த கடத்தலில் கேரளாவை சேர்ந்த மேலும் 4 பேர் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.  முகம்மது, சுகேல், முகமது பசிலூர், ரகுமான் ஆகியோர்  கடத்தி வந்த நிலையில், வேன் போலீசாரிடம் சிக்கியதும் அவர்கள் காரில் தப்பிச் சென்றது தெரிய வந்தது. 

இதனை அடுத்து ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் பதுங்கி இருந்த கேரளாவை சேர்ந்த முகமது மிசைல், முகமது அப்ரார், பாஜாஸ், உம்மர்  ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது. சந்தன கட்டைகளை 6 பேரும் எங்கிருந்து கடத்தி வந்தனர்? இந்த கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கலாமா? யாருக்கு கொண்டு சென்றார்கள்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு தகவல்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. இதனை அடுத்து கைதான ஆறு பேரையும் சேலம் ஆறாவது குற்றவியல் நடுவர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web