6 கிலோ உயர் ரக கஞ்சா கடத்தல்.. போலீசிடம் சிக்கிய ஐ.டி ஊழியர்.. அதிர்ச்சி பின்னணி!

 
ராகுல்

சென்னை மடிப்பாக்கம் காவல் நிலைய தலைமைக் காவலர் பெரிய கருப்பசாமி துரைப்பாக்கம் 200 அடி ரேடியல் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்று போலீஸ் நிற்பதை பார்த்து திரும்பி செல்ல முயன்றது. இதைப் பார்த்த தலைமைக் காவலர் வாகனத்தின் அருகே சென்று அந்த நபரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்.

அப்போது அவர் 6 கிலோ எடையுள்ள 1.5 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் நங்கநல்லூரைச் சேர்ந்த சீனிவாச ராகுல் (29) என்பதும், பெருங்களத்தூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. அவர் பெங்களூரில் இருந்து கஞ்சா வாங்கியது தெரியவந்தது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கஞ்சாவை யாரிடம் கொடுப்பது என்று தெரியவில்லை என்றும், வாட்ஸ்அப் அழைப்புகள் மூலம் தான் தொடர்பில் இருந்ததாகவும், கஞ்சாவை மாற்றி பணம் பெறுவது மட்டுமே தனது வேலை என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் ராகுல் மீது வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web