ரீல்ஸ் மோகம்... பாம்பை கொன்று வீடியோ பதிவிட்ட இளைஞர் கைது!

 
செந்தில்குமார்

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் மலையாண்டி நகரைச் சேர்ந்தவர் மெய்ஞான செந்தில்குமார் (28). யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் 'ரொம்ப பெருமையா இருக்கு' என்ற பெயரில் பல்வேறு வகையான வீடியோக்களை வெளியிட்டு யூடியூபராக இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த மே 30ம் தேதி இரவு இவரது கிராமத்தில் பாம்பு புகுந்ததையடுத்து, அந்த பாம்பை குச்சியால் அடித்து கொன்று, அந்த பாம்பு கட்டுவிரியன் பாம்பு என்று வீடியோ எடுத்து தனது சேனலில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து கீரனூர் சரக வனத்துறையினர்  செந்தில்குமாரை பிடித்து விசாரணை நடத்தினர். பாம்பை கொன்றதை ஒப்புக்கொண்ட அவர், அது விஷமற்ற நீர்ப்பாம்பு என்று கூறினார். இதையடுத்து, பாம்பை கொன்று வீடியோ வெளியிட்ட குற்றத்திற்காக வனவிலங்கு சட்டம் 1972ன் பிரிவின் கீழ் மெய்ஞான செந்தில்குமார கைது செய்யப்பட்டார்.

பின்னர், அவரை விராலிமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வரும் 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து செந்தில்குமார் புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இந்த சம்பவம் கீரனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web