இந்தியாவில் முதல்முறையாக SNIPER ரைஃபிள்கள் ஏற்றுமதி!

 
ரைபிள்

 இந்தியாவில்  பெங்களூரில் பிரபல ஆயுத நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்திய வரலாற்றில் முதன்முறையாக தற்போது SNIPER ரைஃபிள்கள் ஏற்றுமதி செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி பெங்களூரில் SSS defence என்ற பிரபலமான ஆயுத நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் துப்பாக்கிகளை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் தற்போது கையெழுத்திட்டுள்ளது.

ரைபிள்

இந்த ஒப்பந்தத்தின் படி 338 லாபுவா மேக்னம் கேலிபர் ரக துப்பாக்கிகள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இந்த வகை துப்பாக்கிகள் 1500 மீட்டருக்கும் அப்பால் இருக்கும் குறிக்கோள்களை துல்லியமாக சுடும் தன்மை வாய்ந்தது.  இத்துடன் சுமார் ரூ‌.413 கோடி மதிப்பிலான துப்பாக்கி குண்டுகளும் ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது. இது இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ரைபிள்

இந்த வகை துப்பாக்கிகளை பயன்படுத்த பல்வேறு நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில்  துப்பாக்கி ஏற்றுமதியில் இந்தியா புதிய உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இந்தியா சிறிய ரக துப்பாக்கிகள் முதல் மிசைல்கள் வரை இறக்குமதி செய்து வந்தது. தற்போது துப்பாக்கி விற்பனை மற்றும் ஏற்றுமதியையும் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனால் இந்தியாவின் ஆயுத வியாபாரம் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web