சூரிய வெடிப்பு.. நேரலையில் படம் பிடித்து அனுப்பிய ஆதித்யா எல்-1!

 
ஆதித்யா எல்-1

ஆதித்யா எல்-1 சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய முதல் விண்கலம் ஆகும். இந்த விண்கலம் மே 10 மற்றும் 12 ஆம் தேதிகளில் சூரிய வெடிப்பை புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள இஸ்ரோ, 2003-ம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த சூரியப் புயல் இது என்று கூறியுள்ளது.


ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஆதித்யா எல்1 விண்கலம் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஏவப்பட்டது. சூரியனை ஆய்வு செய்வதற்கான முதல் திட்டமாக ஆதித்யா எல்1 விண்கலத்தையும் இஸ்ரோ ஏவியது.

பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ. 125 நாட்கள் தூரம் பயணித்த ஆதித்யா எல்1 விண்கலம் கடந்த ஜனவரி மாதம் எல்1 எனப்படும் லாக்ராஞ்சியன் புள்ளியில் நிறுத்தப்பட்டது. சூரியனின் ஈர்ப்பு விசையும் பூமியின் ஈர்ப்பு விசையும் சமமாக இருக்கும் பகுதி L1 அல்லது Lagrangian point எனப்படும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web