சோனியா காந்தி எதிர்க்கட்சி தலைவராக தேர்வு!

 
சோனியா காந்தி

 நாளை ஜூன் 9ம் தேதி இரவு 8 மணிக்கு மோடி 3 வது முறை பிரதமராக  பதவியேற்க உள்ளார். இதற்காக ராஷ்டிரபதிபவன் இப்போதே களைகட்டத் தொடங்கியுள்ளது.  உலகம் முழுவதும் 8000 பேருக்கு இந்நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. துப்புரவு தொழிலாளர்கள், திருநங்கைகள் முன்வரிசையில் அமர வைக்கப்பட உள்ளனர். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் 99 உறுப்பினர்களை பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையான எதிர்க்கட்சியாக உருவெடுத்து உள்ளது.

சோனியா பிரியங்கா

இந்நிலையில்  காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக அதாவது எதிர்க்கட்சி தலைவராக  யாரை  தேர்ந்தெடுக்க உள்ளனர் என்ற ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.  இது குறித்த  காங்கிரஸ் கமிட்டி ஆலோசனை கூட்டம்  இண்டியா கூட்டணி சார்பில் நடைபெற்றது. அதில், ராகுல்காந்தியை நாடாளுமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்க உறுப்பினர்கள் பரிந்துரை செய்தனர். அதனை தொடர்ந்து நாடாளுமன்ற எம்பிக்கள் கூட்டம் தற்போது டெல்லி பழைய பாராளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
அந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவிக்கு சோனியா காந்தியின் பெயரை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே முன்மொழிந்துள்ளார்.  அதனை கவுரவ் கோகோய், தாரிக் அன்வர், கே சுதாகரன் ஆகியோர் முன்மொழிந்தனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web