சோனியா காந்தி தனிச் செயலர் மறைவு... ராகுல்காந்தி இரங்கல்!

 
ராகுல்


 
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் தனிச் செயலர் பி. பி. மாதவன் . இவர்  மாரடைப்பு காரணமாக காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவருக்கு வயது 73.  இவர் திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைபாடு காரணமாக டெல்லி  எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து காங்கிரஸ் பொதுச்செயலர்கள் பிரியங்கா காந்தியும் கே. சி. வேணுகோபாலும் நேரில் கேட்டறிந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மாதவன் நேற்று டிசம்பர் 16ம் தேதி திங்கட்கிழமை  காலமானார்.

ராகுல்


இதனையடுத்து, மாதவனின் உடல் அவரது சொந்த ஊரான கேரளத்தின் திருச்சூருக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று டிசம்பர் 17ம் தேதி அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்தார்.

கேரளத்தின் திருச்சூர் நகரத்துக்கு இன்று வருகை தந்த ராகுல் காந்தி மறைந்த மாதவன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.  மக்களவையில் இன்று 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' அமல்படுத்துவதற்கான மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ராகுல் காந்தி திருச்சூரிலிருந்து மீண்டும் தில்லிக்கு உடனடியாகப் புறப்பட்டுச் சென்றதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!