சபரிமலை சீசனை முன்னிட்டு தென் மத்திய ரயில்வே சிறப்பு ரயில்கள் !

 
சபரிமலை ரயில்
 

சபரிமலை ஐயப்பன் சீசன் தொடங்கியுள்ள நிலையில், பக்தர்கள் அதிக அளவில் பயணிக்க உள்ளதை கருத்தில் கொண்டு தென் மத்திய ரயில்வே பல சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது. இதில் மச்சிலிப்பட்டினம்–கொல்லம் இடையேயான சிறப்பு ரயில்கள் காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்பட உள்ளன.

சபரிமலை

அதேபோல் நரசப்பூர்–கொல்லம் மற்றும் சார்லபள்ளி–கொல்லம் இடையேயும் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இவை தமிழகத்தின் காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாகச் செல்லவுள்ளதால், சபரிமலை நோக்கிச் செல்லும் பக்தர்களுக்கு பயணத்தில் மிகுந்த இலகுவாக இருக்கும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

சபரிமலை

மேலும், காக்கிநாடா டவுன்–கோட்டயம் மற்றும் ஹுஸூர் சாஹிப் நாந்தேட்–கொல்லம் இடையேயும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. குறிப்பாக, நாந்தேட்–கொல்லம் ரயில் திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, செங்கோட்டை வழியாகச் செல்வதால், தமிழகத்தின் பல மாவட்ட பக்தர்களுக்கு இது பெரும் உதவியாக அமையும் என தென் மத்திய ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!