ஸ்ப்பா... என்ன வெய்யிலு? தப்பிக்க இதையெல்லாம் மறக்காம செய்துடுங்க!

 
வெயில்

இந்த கோடை காலத்தில் வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க இதையெல்லாம் மறக்காம செய்துடுங்க. வெயில் இப்போதே சுட்டெரிக்க தொடங்கி விட்டது .பொதுவாக கோடை காலங்களில் சருமம் வறட்சியாகும். வெளியில் செல்லும் போது மேக்கப் போட்டு முகத்தை அழகாக்கி கொள்வோம். ஆனால் எப்போதும் சருமத்தை பொலிவாகவும் புத்துணர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள சிறிது நேரமும் குறைந்த அளவு மெனக்கெடலும் மட்டுமே போதும். இதற்காக பார்லருக்கு செல்லவோ, ஆயிரக்கணக்கில் பணம் செலவழிக்கவோ தேவையில்லை. வீட்டிலேயே எளிய நடைமுறைகள் மூலம் பட்டு போன்ற சருமத்தை பெறலாம். 

பாலுடன் சிறிது குளிர்ந்த நீர் சேர்த்து முகத்தில் மசாஜ் செய்து அரை மணி ஊற விடவேண்டும் . வெதுவெதுப்பான நீரில் முகத்தை அலசி விட முகம் பளிச்சோ பளிச்.

இதனை தினசரி செய்து வந்தால் வெயிலில் சருமம் கருப்பாகாமல் தடுக்கலாம்.

முகம் பளபளப்பாக இருக்க இயற்கை பேஷியல்!

விளக்கெண்ணெயில் மஞ்சள் பொடி, சிறிது உப்பு கலந்து கண்களைச் சுற்றித் தடவி அரைமணி ஊறவிட்டால் கண்களை சுற்றி  உருவாகும் கருவளையும் காணாமல் போகும்.
கோடை காலங்களில் குளிக்கும் நீரில் வேப்பிலையை போட்டு கொதிக்க வைத்து அந்த நீரில் குளித்து வர வியர்வை நாற்றம் குறையும்.கண்களை மூடி இமைகளில்   வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி  10 நிமிடம் வைத்திருந்தால் கண்கள் மெருகேறும்.

பயணங்களில் ஸ்கார்ப் அல்லது தொப்பி அணிந்து கொள்ள வேண்டும்.  அடி முடியில் வெயில் படாமல் மறைத்து கொள்ள வேண்டியது அவசியம். 
வெயில் 
சோற்று நீரை வைத்து கூந்தலை அலசி விட பளபளப்பான கூந்தல் நிச்சயம். 
தேன், எலுமிச்சை சாறு இரண்டையும் சம அளவு கலந்து காலையும்,  இரவிலும் குடித்து வர உடல் ஆரோக்கியம் பெருகும். 
வெயிலில் அலைந்து விட்டு வீட்டிற்கு வந்தது இஞ்சி சேர்த்த  மோர் குடித்து  வர தோல் மினுமினுக்கும். உடல் பொலிவு பெறும் புத்துணர்ச்சி  பெறுவீர்கள்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web