இந்தியாவில் நடைபெற்ற ‘மிஸ் இளம் அழகி’ போட்டியில் ஸ்பெயின் கல்லூரி மாணவி வெற்றி!

 
ஸ்பெயின் அழகி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சர்வதேச மிஸ் இளம் அழகி போட்டி நடைபெற்று முடிந்துள்ளது. இந்தியா முதன்முறையாக இந்த மிஸ் இளம் அழகி 2025 போட்டியை நடத்தியுள்ளது. இந்த போட்டியில் இந்தியா, இலங்கை, கனடா, போட்ஸ்வானா, கொலம்பியா, கியூபா, டொமினிகன் குடியரசு, பிஜி, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், மெக்சிகோ, நமீபியா, நெதர்லாந்து, பராகுவே, பெரு, பிலிப்பைன்ஸ், புவேர்ட்டோ ரிக்கோ, ருமேனியா, ஸ்பெயின், அமெரிக்கா, வெனிசுலா, வியட்நாம், ஜிம்பாப்வே என  24 நாடுகளை சேர்ந்த 13 முதல் 19 வயதுடைய இளம் அழகிகள் கலந்து கொண்டனர். 

ஸ்பெயின் அழகி மிஸ் அழகி போட்டியில் முதலிடம்! 

இந்த போட்டியில் இந்தியா சார்பில் காசியா லிஸ் மெசோ என்ற அழகி கலந்து கொண்டார். போட்டிக்கான சுற்றுக்களில்  நீச்சல் உடை உள்பட கவர்ச்சிகரமான சுற்றுகள் இடம் பெற்றன. போட்டியில் பங்கு பெற்ற அழகிகள் தங்கள் நேர்த்தி, தன்னம்பிக்கை மற்றும் திறமைகளை வெளிப்படுத்தி, நடுவர்கள் மற்றும் பார்வையாளர்களை கவர்ந்தனர். இதில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த அழகி லோரெனா ரூயிஸ் அனைத்து சுற்றுகளிலும் வெற்றி பெற்று சர்வேதச மிஸ் இளம் அழகி பட்டம் வென்றார். 

ஸ்பெயின் அழகி மிஸ் அழகி போட்டியில் முதலிடம்! 

இந்திய அழகி காசியா லிஸ் மெசோ 2வது இடத்தையும், 3வது இடத்தை கொலம்பியா அழகி வலேரியா மொராலசும் பெற்றுள்ளனர். இந்தப் போட்டிகள் குறித்து தேசிய செய்தி தொடபாளர் சர்வேஷ் காஷ்யப்   “இந்த போட்டி உலகளாவிய கவனத்தை ஈர்த்தது. மிஸ் இளம் அழகி யுனிவர்ஸ்-2025 போட்டியை இந்தியா அக்டோபரில் நடத்த உள்ளது. சுமார் 75 நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் இடம்பெறுவார்கள். அதிகாரப்பூர்வ தேதிகள் விரைவில் உறுதி செய்யப்படும்” எனக் கூறியுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?