தீபாவளிக்கு தயார்... 95 மருத்துவமனைகளில் தீக்காய சிறப்பு வார்டுகள் தொடக்கம்..!!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்பட உள்ளது . இதற்காக புத்தாடை , பட்டாசு ஷாப்பிங் களை கட்டி வருகிறது. இந்நிலையில் தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் எனதமிழக அரசு அறிவித்துள்ளது. அத்துடன் தேவையான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் தீபாவளியை சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாடும் வகையில் 18000 போலீசாரை பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் அசம்பாவிதங்கள் நேர்ந்து விட்டால் தீக்காய சிகிச்சை அளிப்பதற்காக தமிழகத்தில் 95 இடங்களில் தீ விபத்துக்கான சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. 750 படுக்கைகளுடன் 95 மருத்துவமனைகளில் இந்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த 95 மருத்துவமனைகளிலும் தீ விபத்துகள் நேர்ந்தால் அதற்கு தேவையான மருந்து போன்ற உபகரணங்கள் போதுமான அளவில் இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது" என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணின் தெரிவித்துள்ளார். சென்னை, கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தீபாவளி தீக்காய சிறப்பு உள்நோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் "தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, பாதுகாப்புடன் பட்டாசு வெடிப்பதும், தீ விபத்து இல்லாத தீபாவளியை கொண்டாடவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பட்டாசு வெடிப்பதுக்குரிய நேரம், பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்த வழிகாட்டும் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதையும் மீறி எங்கேயாவது தீ விபத்துகள் ஏற்பட்டால் அவர்களை பாதுகாப்பதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள் என 95 இடங்களில் தீ விபத்துக்கான சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இங்கு 750 படுக்கைகளுடன் 95 மருத்துவமனைகளில் இந்த வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. அந்தவகையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறப்பு தீக்காய சிறப்பு தீக்காய அமைப்பாக செயல்பட்டு வருகிறது. 1973 ல் 10 படுக்கைகளுடன் தொடங்கப்பட்ட சிறப்பு தீக்காய பிரிவு இன்றைக்கு தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவுக்கே சிறந்த அடையாளமாக விளங்கி கொண்டிருக்கிறது. இந்த பிரிவில் 24 மணி நேரமும் மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்களும் தீக்காயம் ஏற்பட்ட நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!