நாளை முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. முன்பதிவு தொடக்கம்...!!

 
பேருந்து

கார்த்திகை மாதம் என்றாலே உலகம் முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்கள் விரதமிருந்து மாலை அணிந்து கூட்டம் கூட்டமாக சபரிமலை செல்வது வழக்கம். இவர்களின் தேவைகள் மற்றும் வசதிகளை கருத்தில் கொண்டு இந்த மாதம் முழுவதும் சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. நாளை நவம்பர் 16ம் தேதி வியாழக்கிழமை கார்த்திகை மாதம் பிறக்க உள்ளது. கார்த்திகை மாதம் முழுவதும் ஐயப்ப பக்தர்கள் விரதமிருந்து மாலையணிந்து சபரிமலை சென்று வருவர்.  இதற்காக நவம்பர் 16.11.23 முதல் 16.01.24 வரை  தமிழகத்தில் உள்ள முக்கிய மாவட்டங்களில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என  அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.  இது குறித்து போக்குவரத்துத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  

சபரிமலை

அதில்  “கேரள மாநிலத்தில்‌ மிகவும்‌ பிரசித்திபெற்ற சபரிமலையில்‌ உள்ள ஐயப்பன்  ‌ ஆலயத்திற்கு ஒவ்வொரு ஆண்டும்‌ நடைபெறும்‌ மண்டல பூஜை மற்றும்‌ மகர விளக்கு  திருவிழாக்களின்‌ போது, தமிழகத்திலிருந்து ஐயப்ப பக்தர்கள்‌ சென்று வர ஏதுவாக, தமிழகத்தின்‌ முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப்‌ போக்குவரத்துக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ ஒவ்வொரு ஆண்டும்‌ சிறப்புப்‌ பேருந்துகள்‌ இயக்கப்பட்டு வருகின்றன.  அந்த வகையில் நடப்பாண்டிலும் நவம்பர் 16 முதல் ஜனவரி 16 வரை சென்னை திருச்சி, மதுரை மற்றும்‌ புதுச்சேரி / கடலூர்‌ ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவைப்‌ பேருந்துகள்‌ மற்றும்‌ குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும்‌ படுக்கை வசதி  சிறப்புப்‌ பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 
அதே நேரத்தில் கோவில் நடைதிறக்கப்படும் நாட்கள் குறித்து சபரிமலை தேவசம்போர்டு அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.

சபரிமலை

அதன்படி டிசம்பர் 27 முதல் டிசம்பர் 30  மாலை 5 மணி வரை  கோவில்‌ நடை சாத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து டிசம்பர் 26 முதல் டிசம்பர் 29 வரை இந்த சிறப்பு பேருந்துகள்  இயக்கப்படமாட்டாது என தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை விட   இந்த வருடம்‌ பக்தர்கள்‌ கூடுதலாக பயணம்‌ செய்ய முன்வருவார்கள்‌ என எதிர்பார்க்கப்படுகிறது. 
இதனைக்  கருத்தில்‌ கொண்டு சென்னை மற்றும்‌ இதர இடங்களிலிருந்து கூடுதலாக பேருந்துகள்‌ இயக்க அனுமதி பெறப்பட்டு  சிறப்பான  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும்‌ குழுவாக செல்லும்‌ பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில்‌ பேருந்து வசதி செய்து தரப்படும்‌.   30 நாட்களுக்கு முன்னதாக இச்சிறப்புப்‌ பேருந்துகளுக்கு ஆன்லைன் மூலமாக, WWW.TNSTC.IN மற்றும் TNSTC Official App இணையத்தளங்களில்‌ முன்பதிவு செய்துகொள்ளலாம்.  பேருந்துகள் குறித்த கூடுதல் தகவல்களுக்கு  9445014452, 9445014424, 9445014463 மற்றும்‌ 9445014416 ஆகிய கைப்பேசி எண்களைத்‌ தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web