சொந்த ஊருக்கு செல்ல தயாராகிட்டீங்களா.... சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் !
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு சிறப்பு தொகுப்பை ரேஷன் கடைகள் மூலம் வழங்கி வருகிறது. நடப்பாண்டை பொறுத்தவரை ஜனவரி 14 முதல் 19 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறைக்காக சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்லத் திட்டமிட்டுள்ளனர்.
ஏற்கனவே பேருந்துகள், ரயில்களில் முன்பதிவு முடிந்து விட்ட நிலையில், தற்போது சிறப்பு பேருந்துகளில் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.பொங்கல் பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்வதற்காக இன்று முதல் 4 நாட்களுக்கு 14,012 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.
சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் என 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும், பயணிகள் இந்த பேருந்து நிலையங்களுக்கு செல்ல சிறப்பு மாநகர இணைப்பு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!