வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்... சத்ய பிரதா சாகு உத்தரவு!
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நவம்பர் 9, 10, 23, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ள நிலையில், பெயர் சேர்ப்பு படிவங்கள், திருத்தம் மேற்கொள்ள வேண்டிய படிவங்களைத் தேவையான அளவு வைத்திருக்க தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவுறுத்தி உத்தரவிட்டுள்ளார்.

18 வயது நிறைவடைந்தவர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து கொள்ளலாம். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் 2026ல் வர இருக்கும் நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் , திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
2026 ஜனவரி 1ம் தேதி 18 வயது நிறைவடைய உள்ளவர்கள் அனைவரும் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலி்ல் சேர்ப்பதை அடிப்படையாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகளை மேற்கொள்ளலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நவம்பர் 9ம் தேதி முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணிகள், திருத்தம் மேற்கொள்ளும் பணிகளுக்காக சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாம்களில் பெயர் சேர்த்தல், திருத்தம் மேற்கொள்ளுதல், முகவரி மாற்றங்களை வாக்காளர்கள் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குச் சாவடிகளை திருத்தி அமைத்தல், வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல், வாக்காளர் பட்டியலிலுள்ள மங்கலான, மோசமான, தரமற்ற, படங்களை மாற்றுதல், பிரிவு அல்லது பகுதிகள், இடைவெளிகளைக் கண்டறிதல் மற்றும் அத்தகைய இடைவெளிகளைக் குறைப்பதற்கான உத்திகளையும் காலக்கெடுவையும் இறுதி செய்தல் போன்ற பணிகள் இந்த சிறப்பு முகாம்களில் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு முகாம்கள் தவிர, பெயர் சேர்த்தல், திருத்தங்களை மேற்கொள்வதற்கான விண்ணப்பங்களை அலுவலக நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர்கள் இவர்களிடம் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி மற்றும் வயது இவைகளுக்கான சான்றுகளுடன் சமர்ப்பிக்க வேண்டும். 25 வயதுக்குக் கீழுள்ளவர்கள் வயது சான்றிதழுக்கான அடையாள சான்றிதழின் நகலையும் இணைக்க வேண்டும். www.voters.eci.gov.in, https://voterportal.eci.gov.in போன்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரி மற்றும் "வாக்காளர் உதவி" கைபேசி செயலி VOTER HELPLINE Mobile App இவைகளின் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
