நவம்பர் 8 முதல் தீபாவளி சிறப்பு ரயில்கள்... முன்பதிவுக்கு முந்துங்க...!!

 
பயணிகள் பயன்படுத்திக்கோங்க…!டிசம்பர் மாத சிறப்பு ரயில்கள்!!

 தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே மீதம் உள்ளன. தென் மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்வது வழக்கமாக  இருந்து வருகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரயில்களில் முன்பதிவு முடிந்துவிட்டதால் பயணிகள் திண்டாடுவர். இவர்களின் கோரிக்கை மற்றும் தேவைகளின் அடிப்படையில் தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

ஊட்டி மலை ரயில் ரத்து!!

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்   செல்லும் பொதுமக்கள்  கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை – திருநெல்வேலி – சென்னை இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி   சென்னை – திருநெல்வேலி – சென்னை இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட உள்ளது.

ரயில்
இந்த சிறப்பு ரயில்  சென்னை-நெல்லை இடையே நவம்பர் 8, 15, 22   தேதிகளில்  இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் சென்னையிலிருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.45 மணிக்கு  திருநெல்வேலிக்கு  சென்றடையும். மறுமார்க்கமாக நவம்பர்  9, 16, 23  தேதிகளில் நெல்லையிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3.45 மணிக்கு சென்னை வந்தடையும். இந்த சிறப்பு ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர், வழியாக செல்லும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web