உற்சாகமா கொண்டாடுங்க... தீபாவளிக்கு மற்றொரு சிறப்பு ரயில்... !!

 
ரயில்

தீபாவளிக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் பணிக்காக வெளியூர்களில் வசிப்பவர்கள் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டு வருகின்றனர். ரயில்களில் முன் பதிவு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் தற்போது சிறப்பு ரயில்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நாகர்கோவில் பெங்களூரூ இடையே சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில்  நாகர்கோவில் - பெங்களூரு சிறப்பு ரயில் (வண்டி எண் 06083) நாகர்கோவிலில் இருந்து செவ்வாய்கிழமை தோறும்  3 வாரங்களுக்கு இயக்கப்படும்.

ரயில்

அதாவது இந்த ரயில் நவம்பர் 7, 14 மற்றும் 21   தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து இரவு 7.35 மணிக்கு புறப்படும். மறுநாள் மதியம் 12.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.  
பெங்களூரு-நாகர்கோவில் இடையேயான சிறப்பு ரயில் (வண்டி எண் 06084) பெங்களூரில் இருந்து புதன்கிழமைகள் தோறும் மூன்று வாரங்கள் இயக்கப்படும். அதன்படி  நவம்பர்  8, 15 மற்றும் 22  தேதிகளில் பிற்பகல் 2.15 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு  அடுத்த நாள் காலை 6.10 மணிக்கு நாகர்கோவிலைச் சென்றடையும்.  

ரயில்

இந்த ரயிலில் 1 ஏசி 2-டயர் கோச், 3 ஏசி 3-டயர் கோச், 10 ஸ்லீப்பர்  2ம் வகுப்பு கோச், 2 ஜெனரல் கோச்  இவை தவிர 2 லக்கேஜ் பெட்டிகளும் இருக்கும்.இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், மொரப்பூர், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ‘ஏ’, பங்காரப்பேட்டை, கிருஷ்ணாஜபுரம், பெங்களூரு கண்டோன்மெண்ட் மற்றும் பெங்களூரு சிட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web