பௌர்ணமி கிரிவலம் : திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்!

 
திருவண்ணாமலை
 இன்று பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இன்று பகல் 12 மணிக்கு திருவண்ணாமலை கிளம்பும் ரயில், நாளை காலை 8 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு நாளை மதியம் 12.30 க்கு தாம்பரம் வந்தடையும்.

திருவண்ணாமலையில், மலையையே சிவனாக கருதி பக்தர்கள் ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் கிரிவலம் வந்து வழிபடுகின்றனர். அந்த வகையில் இன்று ஆனி மாதத்திற்கான பௌர்ணமி தினத்தையொட்டி இன்று காலை 7:46 மணிக்கு துவங்கி நாளை ஜூன் 22ம் தேதி காலை 7:21 மணிக்குள் கிரிவலம் வருகின்றனர். 

திருவண்ணாமலை
இந்நிலையில், பக்தர்களின் வசதிக்காக பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னையில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகளும், ரயில்களும் இயக்கப்படுகிறதுஇந்நிலையில் பௌர்ணமி கிரிவலம் செல்லும் திருவண்ணாமலை பக்தர்களின் வசதிக்காக தாம்பரம் மற்றும் திருவண்ணாமலை இடையே கீழ்க்கண்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். ரயில் எண். 06127 தாம்பரம் – திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து ஜூன் 21, 2024 இன்று மதியம் 12.00 மணிக்குப் புறப்பட்டு மாலை  5 மணிக்கு திருவண்ணாமலை சென்றடைகிறது. 

திருவண்ணாமலை
ரயில் எண். 06128 திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் சிறப்பு ரயில் திருவண்ணாமலையில் இருந்து நாளை ஜூன் 22ம் தேதி காலை 8 மணிக்குப் புறப்பட்டு நாளை 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது. தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், திருக்கோயிலூர், வழியாக திருவண்ணாமலை சென்றடையும்.
அதே போல் பெளர்ணமி மற்றும் வார இறுதி நாளை ஒட்டி சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட ஊர்களுக்கு கூடுதலாக 600 பேருந்துகளும், நாளை  கூடுதலாக 410 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!