சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்.!

 
ரயில்

 இன்று சித்ரா பௌர்ணமியை ஒட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். பக்தர்களின் வசதிக்காக இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு  சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வேலூர் கன்டோன்மென்ட்டுக்கு இயக்கப்படும் மெமு சிறப்பு ரயில் இன்று ஏப்ரல் 23ம் தேதி திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படும் என அறிவித்துள்ளது 

இன்று புறநகர் ரயில் சேவையில் மாற்றம்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1,820 பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது. இந்நிலையில் வேலூர் கன்டோன்மென்ட்டுக்கு இயக்கப்படும் மெமு சிறப்பு ரயில் இன்று சென்னை கடற்கரையில் இருந்து திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து ஏப்ரல் 23ம் தேதி மாலை 6 மணிக்கு மெமு சிறப்பு ரயில் இரவு 9.45 மணிக்கு வேலூர் கன்டோன்மென்ட்டை  அடையும். அங்கிருந்து புறப்பட்டு நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடைகிறது.  இதே ரயில் திருவண்ணாமலையில் இருந்து ஏப்ரல் 24ம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு மெமு சிறப்பு ரயில்  அதிகாலை 5.35 மணிக்கு வேலூர் கன்டோன்மென்ட்டை அடைகிறது .  சென்னை கடற்கரைக்கு காலை 9.50 மணிக்கு வந்தடைகிறது எனத் தெரிவித்துள்ளது.  

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web