நாளை சிறப்பு ரயில்... ஊர் திரும்ப வசதியா முன்பதிவு தொடக்கம்.. !!
தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் லட்சக்கணக்கானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். நேற்று தீபாவளி , இன்று ஓய்வு நாளுடன் விடுமுறை முடிகிறது. இவர்கள் மீண்டும் பணிபுரியும் இடங்களுக்கு திரும்பும் வகையில் சிறப்பு பேருந்துகள், ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக இவர்கள் மீண்டும் சென்னை, கோவைக்கு திரும்புவதற்காக ரயில்வே நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி கோவை திண்டுக்கல் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.இந்த ரயில் நாளை நவம்பர் 14ம் தேதி செவ்வாய்கிழமை காலை 9 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டு திண்டுக்கல்லை பிற்பகல் ஒரு மணிக்கு அடைகிறது. மறு மார்க்கத்தில் திண்டுக்கல்லில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு கோவையை மாலை 5.30 மணிக்கு அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலில் முன்பதிவு வசதி இல்லாத 10 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன. இந்த ரயில் சேவையை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு ரயில்வே சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் கோவை, போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலை, மைவாடி ரோடு, மடத்துக்குளம், புஷ்பத்தூர், பழனி, சத்திரப்பட்டி, ஒட்டன்சத்திரம், அக்கரைப்பட்டி, திண்டுக்கல் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!