தீபாவளிக்கு தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்... நாளை முன்பதிவு தொடக்கம்!

 
ரயில் டிக்கெட்

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்படும். இதற்காக சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள செய்திக்குறிப்பில்  சென்னை தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு வாரத்தில் ஒருநாள் மட்டும் ரயில் செயல்படும்.  

மின்சார ரயில்


செப்டம்பர் 29, அக்டோபர் 6, 13, 20, 27 தேதிகளில் மட்டும் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும். தாம்பரத்திலிருந்து பிற்பகல் 3.30 மணிக்கு கிளம்பும் இந்த ரயில், நாகர்கோவிலில் மறுநாள் காலை 5.15 மணிக்கு சென்றடையும்.  அதேபோல், நாகர்கோவிலிலிருந்து தாம்பரத்திற்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும். செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 26 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இந்த ரயில் இயக்கப்படும். 

ரயில்

நாகர்கோவிலிலிருந்து இரவு 11.15 மணிக்கு கிளம்பும் இந்த ரயில், தாம்பரத்தில் மறுநாள் பிற்பகல் 12.30 மணிக்கு வந்து சேரும். இந்த ரயில் வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு மூலம் தாம்பரத்தை அடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் எனத் தொடங்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?