ஆகஸ்ட் 15 தொடர் விடுமுறைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

 
பயணிகள் பயன்படுத்திக்கோங்க…!டிசம்பர் மாத சிறப்பு ரயில்கள்!!
 

நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தையொட்டி வருகின்ற தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஆகஸ்ட்14ம் தேதி சென்னை சென்ட்ரல் - போத்தனூர் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஊருக்கு கிளம்ப தயாராகிட்டீங்களா?! பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்கள் அட்டவணை வெளியீடு!!

அன்று இரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06027) மறுநாள் காலை 8.30 மணிக்கு போத்தனூர் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆகஸ்ட் 17ம் தேதி மறுமார்க்கமாக  இரவு 11.30 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06028) மறுநாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்ட்டிரல் சென்றடைகிறது. ஆகஸ்ட்  14, 16 தேதிகளில் மங்களூரு சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து, திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்திற்கு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த தேதிகளில் மாலை 7.30 மணிக்கு மங்களூருவில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06041) மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும் எனத் தெரிகிறது.  

மறுமார்க்கமாக 15, 17  தேதிகளில் மாலை 5.15 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06042) மறுநாள் காலை 6.30 மணிக்கு மங்களூரு சென்றடைகிறது. ஆகஸ்ட்  17ம் தேதி நாகர்கோவில் - தாம்பரம் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அன்று இரவு 11.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06012) மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரம் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆகஸ்ட் 18ம் தேதி மறுமார்க்கமாக  பிற்பகல் 3.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06011) மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்கள்

ஆகஸ்ட் 14ம் தேதி சென்னை எழும்பூர் - செங்கோட்டை இடையே எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று இரவு 9.55 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06089) மறுநாள் காலை 11.30 மணிக்கு செங்கோட்டை சென்றடைகிறது. மறுமார்க்கமாக 17ம் தேதி இரவு 7.45 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06090) மறுநாள் காலை 9.05 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடைகிறது.   இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?