ஓபிஎஸ் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு!
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் .இந்த கோவில் மிகச்சிறந்த பரிகார தலமாக செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் பல அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், சினிமா பிரபலங்கள் என ஏராளமானோர் வருகை தந்து முருகனை வழிபட்டு செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.
அந்த வகையில் மார்கழி மாதம் பிறந்து இரு நாட்களே ஆன நிலையில், அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இன்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெற்று வருகிறது.
இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வருகை தந்தார். ஓபிஎஸ் அபிஷேகத்தில் கலந்து கொண்டு முருகனை மனதார வழிபட்டார். தொடர்ந்து அதிகாலை 3.30 மணிக்கு நடைபெற்ற விஸ்வரூப தரிசனத்தில் கலந்து கொண்டு வழிபாடு செய்தார். இதையடுத்து மூலவர், சண்முகர், பெருமாள், தட்சிணாமூர்த்தி சன்னதிகளுக்கு சென்று வழிபாடு செய்தார்..
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!