உஷார்... இன்று முதல் வேகக்கட்டுப்பாடு... மீறினால் அபராதம்...!!

 
போக்குவரத்து

இன்று நவம்பர் 4ம் தேதி சனிக்கிழமை முதல் சென்னையில் வேகக்கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது. இது குறித்து   சென்னை மாநகர காவல்துறை விடுத்த செய்திக்குறிப்பில் “ சென்னை மாநகரில்  வேகவரம்பை மீறி செல்லும்,  இருசக்கர  வாகனங்கள்  உட்பட  இலகுரக வாகனங்களுக்கு  ரூ1,000 அபராதத் தொகையும்,  கனரக வாகனங்களுக்கு ரூ2000 அபராதமும் விதிக்கப்படும் ” எனத் தெரிவித்துள்ளது.  

இந்தியாவிலேயே கடந்த ஆண்டு அதிக சாலை விபத்துக்கள் சென்னையில் தான் என்கின்றன புள்ளிவிபரங்கள். இதனையடுத்து சென்னை பெருநகரத்தில் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்  வாகன ஓட்டிகளுக்கு வேக வரம்பை பெருநகர போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது. தற்போது தினசரி சென்னையில் மட்டும் 62.5 லட்சம் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சாலைப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சாலையை பயன்படுத்துபவர்கள் போக்குவரத்து விதிகள் மற்றும் விதிமுறைகளை கடுமையாக பின்பற்றுவது பாதுகாப்பான போக்குவரத்து சூழலுக்கு வழிவகுக்கும் .  

வாகன ஓட்டிகள்

குறிப்பாக விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மட்டுமல்லாமல் மற்ற சாலைப் பயணிகளையும் பாதிப்படைய செய்யலாம்.   மேலும்  ஆட்டோக்கள் பகல் 7 மணி முதல் 10 மணி வரை மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்திலும், இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை மணிக்கு 35 கிலோமீட்டர் வேகத்திலும் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கனரக வாகனங்கள் பகலில் மணிக்கு 35 கிலோமீட்டர் வேகத்திலும் இரவில் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்திலும் செல்லலாம். இலகு ரக வாகனங்கள் மற்றும் 2  சக்கர வாகனங்கள் பகல் 7 மணி முதல் 10 மணி வரை மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்திலும்,  இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்திலும் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வாகன ஓட்டிகள்


இலகுரக வாகனங்கள் அதிகபட்சமாக 60 கிமீட்டர் வேகத்திலும், கனரக வாகனங்கள் அதிகபட்சமாக 50 கிலோமீட்டர் வேகத்திலும் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2  சக்கர வாகனங்கள் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்திலேயே செல்ல வேண்டும். ஆட்டோக்கள் 40 கிமீட்டர் வேகத்தில் பயணிக்கலாம். குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வகையான வாகனங்களும் மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என  போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web