ஆன்மிகத்தில் மூழ்கிய தமன்னா... வைரலாகும் புகைப்படம்!
தமிழ்பட நடிகைகள் சமீபகாலங்களாக ஆன்மிக வழிபாட்டில் அதிகளவில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.
ரஜினியுடன் ‘காவலா’ பாடலுக்கு தமன்னா ஆடிய ஆட்டம் படத்தின் வெற்றிக்குப் பெரும் பங்கு வகித்தது. தமன்னாவின் இந்த ஆட்டம் ‘பையா’ படத்தில் இருந்தே துவங்கியது. அப்போது ‘பையா’ படத்தின் வெற்றிக்கும் தமன்னா போட்ட கெட்ட ஆட்டம் காரணமாக கூறப்பட்டது.
அதன் பின்னர் பாகுபலியின் பலமான திரைக்கதை அமைப்பிலும் தமன்னாவின் ஆட்டம் பெரிதும் ரசிக்கப்பட்டது.

தமிழ், தெலுங்கு மட்டுமின்றி தற்போது இந்தியிலும் பிரபலமான ஹீரோயினாக வலம் வருகிறார் தமன்னா. கவர்ச்சியாக ஒரு பாடலுக்கு தமன்னா டான்ஸ் ஆடினால் அந்த படம் பெரிய ஹிட் ஆகிறது. படத்திற்கும் நல்ல வரவேற்பும் விளம்பரமும் கிடைக்கிறது என்று மகிழ்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
இந்நிலையில், ஈஷா யோகா மையத்தில் வழிபட்டதைத் தொடர்ந்து நடிகை தமன்னா தற்போது பூரி ஜகந்நாதர் கோவிலுக்கு சென்று வழிபட்டிருக்கிறார். காசிக்கு சென்றும் வழிபட்டது குறிப்பிடத்தக்கது. அங்கு அவர் வழிபட்ட பின் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை சமந்தாவும் ஆன்மிகத்தில் அதிகளவில் ஈடுபடுகிறார். இவர் தொடர்ச்சியாக கோவை ஈஷா யோகா மையத்திற்கு சென்று யோகா செய்கிறார். லிங்க பைரவர் கோயிலுக்கும் சென்று வழிபட்டார். நடிகை ஸ்ரேயாவும் ஈஷா மையத்திற்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். நடிகை ஸ்ரீதேவியின் மகளும், பிரபல நடிகையுமான ஜான்வி கபூருக்கு இஷ்ட தெய்வம் திருப்பதி பாலாஜி. எந்தவொரு புதுவிஷயமாக இருந்தாலும், சந்தோஷ முக்கிய தினமாக இருந்தாலும் திருப்பதியில் வழிபடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
