தெறிக்கவிடும் தெர்மாக்ஸ்... சுத்திகரிப்பு ஆலையில் இருந்து ரூ.271.50 கோடிக்கான ஆர்டரை வென்றது!

 
தெர்மாக்ஸ்

தெர்மாக்ஸ் லிமிடெட் ரூபாய் 271.50 கோடி தனியார் துறையில் உள்ள இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து இயந்திர சமநிலை (MBoP) ஆலைக்கான கேப்டிவ் பவர் பிளாண்ட் (CPP) இந்தியாவின் மேற்குப் பகுதியில் உள்ள அவர்களின் புதிய எண்ணெய்-க்கு-ரசாயன (O2C) வசதிக்காக வேலையை செய்ய பெற்றிருக்கிறது. CPPயானது O2C விரிவாக்கம் மற்றும் ஒரு மெகா தொழிற்சாலையை நிறுவுதல் ஆகியவற்றின் ஒரு பகுதியாக வாடிக்கையாளரின் வளாகத்தில் வரவிருக்கும் திட்டங்களின் அதிகரிக்கும் மின் தேவையை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தை 16 மாத காலத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தெர்மாக்ஸ் மோட்டார் தொழிற்சாலை

வெள்ளியன்று தெர்மாக்ஸின் பங்குகள் அதன் முந்தைய முடிவான ரூபாய் 2,248.35ல் இருந்து 1.97 சதவிகிதம்  உயர்ந்து, நாளின் அதிகபட்சமாக ரூபாய்2,292.60 ஆக உயர்ந்துள்ளது. அன்றைய தினம் பிற்பகல் 03:30 மணியளவில் இந்நிறுவனத்தின் பங்குகள் 1.85 சதவிகிதம் உயர்ந்து ரூபாய் 2,290.05 ஆக வர்த்தகத்தை நிறைவு செய்தது. 52 வாரங்களில் அதிகபட்சமாக ரூ.2,678.50 ஆகவும், 52 வாரங்களில் குறைந்தபட்சமாக ரூ.1,830.35 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தெர்மாக்ஸ் தொழிற்சாலை

முன்னணி ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் தீர்வுகள் வழங்குநரான தெர்மாக்ஸ் லிமிடெட், வெப்பமாக்கல், குளிரூட்டல், மின்சாரம், நீர் மற்றும் கழிவு மேலாண்மை, காற்று மாசுக் கட்டுப்பாடு மற்றும் இரசாயனங்கள் ஆகிய துறைகளில் ஒருங்கிணைந்த புதுமையான தீர்வுகளை வழங்கும் சில நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த லார்ஜ்-கேப் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூபாய் 27,143.81 கோடியாக உள்ளது. நிறுவனம் டிசம்பர் காலாண்டு முடிவுகளை (Q3) கடந்த ஆண்டு இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் நிகர விற்பனை 28.88 சதவிகிதம் மற்றும் நிகர லாபம் 59.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கடந்த 6 மாதங்களில், இந்த பங்கு 5.50 சதவிகிதமும் 5 ஆண்டுகளில் 100 சதவிகிதத்திற்கு மேல் லாபத்தை கொடுத்தது. முதலீட்டாளர்கள் இந்த மல்டிபேக்கர் பங்குகளை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web