கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் உயிருடன் மீட்பு!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மானை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகில் உள்ள கொடியங்குளம் என். புதூர் கிராமத்தில் உள்ள 60 அடி கிணற்றில் ஒரு புள்ளிமான் தவறி விழுந்து விட்டதாக ஓட்டப்பிடாரம் தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கரனுக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணத்தில் தத்தளித்த மானை வலை வைத்து உயிருடன் மீட்டனர். பின்னர் அந்த மானை வன அலுவலர் ஆனந்த் தலைமையிலான குழுவினரிடம் ஒப்படைத்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
