பரந்து விரியும் திருச்சி... எக்குத்தப்பாய் எகிறும் சோதனை சாவடிகள்... குற்றங்கள் குறையுமா?

 
சோதனை சாவடி

எம்.ஜி.ஆர் காலம் தொட்டு திருச்சியை தமிழகத்தின் இரண்டாம் தலைநகராக்க வேண்டும் சட்டசபையை திருச்சியில் அமைக்க வேண்டும் ஏனெனில் திருச்சியில் இருந்து தமிழகத்தின் எந்தப்பகுதியையும் மூன்றே மணி நேரத்தில் எட்டிவிடலாம் இதனால் போக்குவரத்து பாதிப்பு குறையும் அரசு அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை ஏன் முதல்வரைக்கூட எளிதில் சந்திக்கலாம் தங்கள் குறைகளை எடுத்துச்சொல்லலாம் என்பது தமிழக மக்களின் நெடுங்கால கனவு! 

இந்த கனவிற்கு அச்சாரம் போடும் விதமாக திருச்சி மற்றும் அதை ஒட்டிய கிராமங்களை திருச்சி மாநகருடன் இணைக்கும் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகிறது இந்நிலையில் நகரங்களில் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், குற்றச் யல்களைக் கண்காணிக்கவும் தடுக்கவும் தற்போதுள்ள ஒன்பது சோதனைச் சாவடிகளுடன் கூடுதலாக ஏழு புதிய சோதனைச் சாவடிகள் அமைக்க மாநகர காவல்துறை முன்மொழிந்து வரைவு அறிக்கையை தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வரும் வாகனங்கள் திருச்சியை கடந்துதான் செல்ல வேண்டும்

சோதனை சாவடி

தற்போது, ​திண்டுக்கல் சாலையில் கருமண்டபம், மதுரை சாலையில் பஞ்சாப்பூர், புதுக்கோட்டை சாலையில் செம்பட்டு, தஞ்சாவூர் சாலையில் காட்டூர் ஆயில் மில் அருகில், சென்னை சாலையில் 'ஒய்' சாலை சந்திப்பு, கரூர் சாலையில் குடமுருட்டி ஆறு, ரெங்கா என ஒன்பது போலீஸ் சோதனைச் சாவடிகள் உள்ளன. திருவானைக்கோவில் மற்றும் லிங்கம் நகர் - திருச்சி நகர காவல் எல்லையில் இருக்கும் முக்கிய சோதனைச்சாவடிகள் ஆகும்.

குற்றச் செயல்களைக் கண்காணிக்கவும், தடுக்கவும், வழக்கமான வாகனச் சோதனையை எளிதாக்கவும், கே.கே.நகர் - ஓலையூர் சாலையில் மேட்டுக்கட்டளை வாய்க்கால் அருகே, கோரையாறு மற்றும் உய்யகொண்டான் கால்வாய், கவி பாரதியை இணைக்கும் பாலம் அருகே கூடுதல் சோதனைச் சாவடிகள் அமைக்க நகர போலீஸார் யோசனை தெரிவித்துள்ளனர். நகரப்பகுதியில் பிரிவு, மேலக்கல்கண்டார்கோட்டை, அரியமங்கலம் குவளக்குடி பாலம் அருகில், கல்லணை சாலையில் திருவளர்ச்சோலை, சர்க்கார்பாளையம் சாலை சந்திப்பு அருகில், நகரின் ஒரு சில இடங்களில் இருக்கும் சோதனைச் சாவடிகளை அருகிலுள்ள பகுதிகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சோதனை சாவடி

இப்படி நகரம் வளர்ச்சி பெறுவது நல்லதுதான் என்றாலும் பல்வேறு குறைபாடுகளையும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். திரிபாதி காலத்தில் இருந்த காவல் உதவி மையங்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு விட்டன, சங்கர்ஜூவால் காலத்தில் அமைக்கப்பட்ட சிசிடிவிக்கள் பாதிக்கும் மேற்பட்டவை செயலிழந்துவிட்டன, அவற்றை எல்லாம் சரிசெய்து காலை வேளைகளில் காவல் உதவி மையங்களை மாமன்ற உறுப்பினர்கள் பயன்பாட்டிற்கு வழிவகுத்து மக்களை சந்திக்கும் இடமாகவும் அதன்பின் காவல்துறையினர் இரவில் பயன்படுத்தும் இடமாகவும் அமைக்கவேண்டும் என்பது ஒரு கோரிக்கையாக உள்ளது. இந்த வரைவு செயல்பாட்டிற்கு வரும் பொழுது இரண்டாம் தலைநகராக திருச்சியை அறிவித்து சட்டசபையை திருச்சியில் அமைக்க வேண்டும் என்பதே பல்வேறு தரப்பு மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. கனவு மெயபட வேண்டுமே?!

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web