இலங்கை விமான நிலையத்தின் நிர்வாகம் இந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.. இலங்கை அரசு அறிவிப்பு!

 
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம்

2013 ஆம் ஆண்டு இலங்கையில் வரம்பந்தோட்டா துறைமுகத்திற்கு அருகில் உள்ள மத்தலயில் 1,743 கோடி ரூபாய் செலவில் விமான நிலையம் கட்டப்பட்டது. இதில் ரூ.1,584 கோடி சீனாவிடம் இருந்து கடனாக பெறப்பட்டது. 12,000 சதுர மீட்டர் டெர்மினல் கட்டிடம், மிகப்பெரிய வணிக விமானங்களைக் கையாளும் அளவுக்கு ஓடுபாதை மற்றும் ஆண்டுக்கு 10 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன் உள்ளது.

இருப்பினும் விமான நிலையம் திறக்கப்பட்டதிலிருந்து குறைந்த எண்ணிக்கையிலான விமானங்கள் மற்றும் தொடர்ச்சியான நிதி இழப்பு போன்ற சிக்கல்களை எதிர்கொள்கிறது. இந்நிலையில் இந்த விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்திய மற்றும் ரஷ்ய நிறுவனங்களிடம் ஒப்படைக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அனுமதியை இலங்கை அமைச்சர்கள் குழு நேற்று வழங்கியது.

இது தொடர்பாக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்தியா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த 2 நிறுவனங்களுக்கு 30 வருட காலத்திற்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web