ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் திருத்தேர் உற்சவம்... ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

 
ஸ்ரீபெரும்புதூர்  ஆதிகேசவ பெருமாள் கோவில்

 வைணவ மகான் ஶ்ரீ ராமானுஜரின் 1007வது அவதார உற்சவம் அவர் பிறந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில் சிறப்பாக கொண்டாடாப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூரில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.  இத்திருக்கோயிலில் தான் ஸ்ரீ ராமானுஜர் சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திர நாளில்  1017ம் ஆண்டு பிறந்தார் என்கின்றன குறிப்புக்கள்.  ஶ்ரீபெரும்புதூரில் வசிக்கும்  மக்கள் ஆதிகேசவ பெருமாளை பெரியவர், ராமானுஜரை சிறியவர் என்றும் அழைத்து வருகின்றனர்.  

ஸ்ரீபெரும்புதூர்  ஆதிகேசவ பெருமாள் கோவில்

ஸ்ரீஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவின் சிறப்பம்சம் ஸ்ரீஆதிகேசவ பெருமாளுக்கு 10 நாள்கள் பிரம்மோற்சவமும் ராமானுஜருக்கு அவதார உற்சவம் என 10 நாள்கள் உற்சவமும் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில்  ராமானுஜரின் 1007வது அவதார உற்சவம்   மே 2ம் தேதி கோலாகலமாகத் தொடங்கப்பட்டது.  தங்கப் பல்லக்கு, மங்களகிரி வைபவம், சிம்ம வாகனம், குதிரை வாகனம் என பல்வேறு வாகனங்களில் ஶ்ரீராமானுஜர் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். ராமானுஜர் அவதார உற்சவத்தில் முக்கிய திருவிழாவாகக் கருதப்படுவது ராமானுஜரின் திருத்தேர் உற்சவமாகும்.

ஸ்ரீபெரும்புதூர்  ஆதிகேசவ பெருமாள் கோவில்

 இன்று தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள்  தேரை வடம் பிடித்து இழுத்தனர்.   50 அடி உயரம் கொண்ட இத்திருத்தேரினை காண தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து  ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.  ராமானுஜர் திருத்தேர்  தேரடி வீதி, திருவள்ளூர் சாலை, திருமங்கையாழ்வார் தெரு மற்றும் முக்கிய வீதிகளின் வழியாக சுமார் 2கிமீ பவனி வந்து நிலையை அடைந்துள்ளது.  தேர் வரும் வீதிகளில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் ஆன்மிக அன்பர்கள்  மோர், பானகம், குளிர்பானங்கள் மற்றும் அன்னதானம் கொடுத்து பக்தர்களை மகிழ்வித்தனர்.  இந்த தேர்த் திருவிழாவை பாதுகாப்பாக நடத்தும் வகையில் சுமார்  300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web