ஸ்ரீரங்கம் கோவில் நம்பெருமாள் வசந்த உற்சவம் தொடக்கம்!!

 
ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம் பூலோக வைகுண்டம் என வைணவ தொண்டர்களால் போற்றப்படுகிறது. இங்கு வருடத்தின் 365 நாட்களும் உற்சவம் நடைபெறும் இதில் கோடை முடிந்ததும் கொண்டாடப்படும் வசந்த உற்சவம் பெரும் சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில் நடப்பாண்டில் வசந்த உற்சவம் மே 27ம் தேதி தொடங்கி ஜூன் 4ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெற உள்ளது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம்  வசந்த உற்சவத்தின் முதல் நாளில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு வந்து சேர்வார் .

19 வருஷ அதிசயம்!! இன்று வைகுண்ட ஏகாதசி உற்சவம்!  திருச்சி முழுவதுமே திருவிழா தான்!! ஸ்ரீரங்கம் கோயில் அட்டவணை!!

அங்கு அலங்காரம், அமுது செய்து சூர்ணாபிஷேகம் கண்டருளி பின்னர் வசந்த மண்டபத்தில் இருந்து மூலஸ்தானம் சென்றடைவது வழக்கம். வசந்த உற்சவத்தின் 7ம் நாளான இன்று  நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளி நெல்லளவு கண்டருளுவார்.  9ம் நாளன்று நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி  தீர்த்தவாரி மற்றும் திருமஞ்சனம் கண்டருளுகிறார்.

ஸ்ரீரங்கம்

வசந்த உற்சவத்தின்போது 9 நாட்களும் வசந்த மண்டபத்தில் சூர்ணாபிஷேகம் என்றழைக்கப்படும் மஞ்சள் பொடியினை நம்பெருமாள் மீது தூவும் நிகழ்ச்சி தினமும் இரவு 8 மணிக்கு நடைபெறும். நம்பெருமாள் வசந்த உற்சவ நாட்களில் இரவு 8 மணிக்கு பிறகு ஆரியப்பட்டாள் வாசலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில்  நிர்வாகத்தின் சார்பில் இணை ஆணையர் மாரிமுத்து செய்து வருகிறார். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web