செஸ் திறமையால் உலகமே வியக்கிறது... பிரக்ஞானந்தாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து!

 
பிரக்ஞானந்தா

 12வது நார்வே சர்வதேச செஸ் தொடர் போட்டிகள் அந்நாட்டின் ஸ்வாடன்ஞர் நகரில் நடைபெற்று  வருகிறது. இதில் தலா 6 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில்  பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலி பங்கேற்றுள்ளனர்.  கிளாசிகள் செஸ்சின் 3வது சுற்றில் பிரக்ஞானந்தா உலகின் நம்பன் 1 வீரர் மாக்னஸ் கால்சனை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற 5வது சுற்றில் உலக செஸ் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள பாபியோனாவை பிரக்ஞானந்தா வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் உலக அளவில் கவனம் ஈர்க்கப்பட்டார் பிரக்ஞானந்தா.

பிரக்ஞானந்தா

 தரவரிசையில் முதல் 2 இடங்களில் உள்ள வீரர்களை வீழ்த்தியதன் மூலம் பிரக்ஞானந்தா செஸ் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளார். இந்நிலையில், பிரக்ஞானந்தாவுக்கு தமிழ்நாடு முதல்வர்  மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பதிவில் “ நார்வே செஸ் தொடரில் பிரக்ஞானந்தா மிகவும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். கிளாசிகல் செஸ்சில் உலகின் நம்பர் 1 மற்றும் நம்பர் 2 வீரர்களை வீழ்த்தி மிகச்சிறப்பான சாதனை செய்துள்ளார். இதன் மூலம்  தரவரிசையில் முதல் 10 இடத்திற்குள் முன்னேறிய பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துக்கள். உங்களின் திறமையை கண்டு ஒட்டுமொத்த செஸ் உலகமே வியக்கிறது ” என பதிவிட்டுள்ளார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web