அதிமுக உதிரி கட்சியாக இருக்கக் கூட தகுதியில்ல்லை... ஸ்டாலின் கடும் தாக்கு!

 
இபிஎஸ் எடப்பாடி ஸ்டாலின்

 

சென்னை கொளத்தூர் தொகுதியில் நடந்த பாக் முகவர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், உண்மையான வாக்காளர்கள் யாரும் பட்டியலில் இருந்து நீக்கப்படக் கூடாது என்பது திமுகவின் உறுதி என தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியல் குறைபாடுகள் குறித்து நீதிமன்றத்திலும் மக்களிடையிலும் போராடி வருவதாகவும் அவர் கூறினார். எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்கு ஆதரவாக அதிமுக உச்சநீதிமன்றத்தை நாடியிருப்பது, கட்சியை டெல்லியில் அடமானம் வைத்ததற்கு சமம் என அவர் விமர்சித்தார்.

ஸ்டாலின் எடப்பாடி

எஸ்.ஐ.ஆர்.-ஐ எதிர்த்து திமுக நீதிமன்றம் செல்லும் நிலையில், அதற்கு ஆதரவாக அதிமுக நின்றிருப்பது வெட்கக்கேடான அரசியல் நிலை என ஸ்டாலின் குற்றம்சாட்டினார். மக்களை நேரடியாக சந்திக்கத் தயங்கும் அதிமுக, குறுக்கு வழியே நாடி வருகிறது என்றும், இவ்வாறு தொடர்ந்தால் எதிர்க்கட்சியாக கூட தகுதியில்லை என்றார். வாக்காளர் நிரூபணம் தனிநபர் மீது சுமத்தப்படுவது தேர்தல் ஆணையத்தின் தவறாகும்; இதற்குக் காரணம் மத்திய பாஜக அரசே எனவும் அவர் தெரிவித்தார்.

இபிஎஸ் ஸ்டாலின்

தமிழ்நாட்டைத் தொடர்ந்து மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் எஸ்.ஐ.ஆர்.-க்கு எதிரான நிலைப்பாடு உறுதியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்டாலின் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். தொடங்கி 10 நாட்கள் கடந்த நிலையில், நேரம் குறைவாக இருப்பதால் திமுக மக்கள் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கிடையே பாலமாக செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் எஸ்.ஐ.ஆர். படிவங்களை நிரப்புவதற்கு பாக் முகவர்கள் உதவ வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!