முதல்வர் உற்சாகக் கொண்டாட்டம்.... மைதானத்தில் கோஃல்ப் விளையாடி பொதுமக்களுடன் செஃல்பி!
தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நிறைவடைந்ததை அடுத்து முதல்வர் கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.
5 நாள் பயணமாக கொடைக்கானலுக்குச் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலினுடன் மனைவி துர்கா ஸ்டாலின், மற்ற குடும்ப உறுப்பினர்களும் சென்றுள்ளனர். தன் குடும்பத்துடன் தனியார் விடுதியில் தங்கியுள்ள முதல்வர் மே 4ம் தேதி சென்னை திரும்புகிறார். வெயிலுக்கு மக்கள் பலரும் கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களில் குவிந்து வருகின்றனர்.

அதே நேரத்தில் முதல்வரும் அங்கிருப்பதால் அவருக்கு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் செல்ல இருக்கும் கொடைக்கானலில் நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா போன்ற அனைத்து பகுதிகளிலும் மாவட்ட நிர்வாகம், முதல்வர் பாதுகாப்புக்குழு இணைந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. ஓய்வுக்காக வந்திருப்பதால் முதல்வரை கட்சியினர் சந்திக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நேற்று ஏப்ரல் 30ம் தேதி மாலை மாலை பசுமை பள்ளத்தாக்கு அருகே உள்ள கோல்ஃப் மைதானத்தில் முதல்வர் ஸ்டாலின் சிறிது நேரம் கோல்ஃப் விளையாடி மகிழ்ந்தார்.

அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோல்ஃப் விளையாடியதைக் கண்டு ரசித்தனர்.
அவர் விளையாடிவிட்டு அங்கிருந்து செல்லும் போது சுற்றுலாப் பயணிகள், கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்களிடம் நலம் விசாரித்தார். செல்ஃபி எடுக்க விரும்பியவர்களுடன் சேர்ந்து போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
