இன்றும் நாளையும் திருவாரூரில் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு!

 
ஸ்டாலின்


 
 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அப்போது  அங்குள்ள மக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட பகுதிகளை வழங்குவது வழக்கம்.

ஸ்டாலின்

அந்த வகையில், மு.க.ஸ்டாலின்  இன்று ஜூலை 9ம் தேதி புதன்கிழமை திருவாரூர் மாவட்டத்தில்  கள ஆய்வு மேற்கொள்கிறார். அப்பொழுது, பல புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். அதன் ஒரு பகுதியாக, முதலமைச்சர் திருவாரூரில் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவச் சிலையை திறந்து வைக்க உள்ளார்.

ஸ்டாலின்
அத்துடன் மாவட்டத்தில் நடைபெற்று வரும் அரசு திட்டங்களையும், மக்களின் குறைகளையும் ஆய்வு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முதல்வரின் வருகையை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.  முதல்வர் ஸ்டாலின்  வருகையையொட்டி, திருவாரூரில் ட்ரோன் கேமரா பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?