இந்த மாத கடைசியில் ஜெர்மணி, இங்கிலாந்து செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

 
முதல்வர்

இந்த மாத கடைசியில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும்,  வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும்  இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கு தமிழக முதல்வர்  ஸ்டாலின் அரசு முறைப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

இந்தப் பயணம் மூலம், தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயர்த்தும் இலக்கை அடையலாம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பயணத்தில்  பல முன்னணி தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டாலின்
 தமிழகத்தில் தொழில் மேம்பாட்டிற்காக பல்வேறு வெளிநாட்டுப் பயணங்களை முதல்வர் மேற்கொண்டு வருகிறார். இதுவரை அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்து, மொத்தம் ரூ.18,498 கோடி மதிப்பிலான தொழில் ஒப்பந்தங்களை செய்துள்ளார்.  
இந்தப் பயணமும், தமிழகத்திற்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இங்கிலாந்து பயணத்தில்  லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார்.  

 ஸ்டாலின்
இந்தப் பயணம், ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 10 வரை சுமார் 10 நாட்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சந்திப்புகளின் மூலம், தமிழகத்தில் உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், பொருளாதார வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தவும்  முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.முதல்வருடன் தலைமைச் செயலர் முருகானந்தம், நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் பல முக்கிய அரசு அதிகாரிகள் உடன் செல்கின்றனர்.  .

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?