நாளை குடும்பத்துடன் கொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்... 5 நாட்களுக்கு ஓய்வு!

 
ஸ்டாலின்

நாளை குடும்பத்தினருடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் சென்று ஓய்வெடுக்கிறார். முதல்வரின் பயணத்தையொட்டி கொடைக்கானலில் ஆறு நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் மலை பிரதேசங்களை நோக்கி ஓய்வெடுக்க படையெடுத்து வருகின்றனர்.

ஸ்டாலின்

இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், நாளை ஏப்ரல் 29ம் தேதி கொடைக்கானல் செல்கிறார். இந்த 5 நாட்களும் கொடைக்கானலில் உள்ள தனியார் சொகுசு தங்கும் விடுதியில் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க உள்ளார்.

ஸ்டாலின்

இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் இ.கா.ப., ஆகியோர் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மாற்றம் தொடர்பாக நேற்று கொடைக்கானலில் ஆய்வு மேற்கொண்டனர். கோடை விடுமுறையில் ஏற்கெனவே சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்துள்ளனர். பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையும் குடும்பத்தினருடன் கொடைக்கானலில் ஓய்வெடுத்து வருகிறார். திமுக தேனி தொகுதி வேட்பாளர் தங்கதமிழ்செல்வனும் குடும்பத்தினருடன் கொடைக்கானலில் ஓய்வெடுத்து வருகிறார். 

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web