குறைவான மதிப்பெண் எடுத்தவங்க அடுத்த வாய்ப்பை பயன்படுத்திகோங்க... முதல்வர் ஸ்டாலின் ட்வீட்!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. வழக்கம் போல் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மேல்நிலைக் கல்விக்கு நுழைவு வாயிலாய் அமையும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்!
— M.K.Stalin (@mkstalin) May 10, 2024
மாணவச் செல்வங்களே... உங்களது எதிர்காலத்தைத் திட்டமிட்டு வடிவமைத்துக் கொள்வதற்கான அடித்தளத்தை வலிமையாக அமைத்துக் கொள்ளுங்கள்!
குறைவான மதிப்பெண்…
இது குறித்து முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் ”10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று மேல்நிலைக் கல்விக்குள் நுழைந்த அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் வாழ்த்துகள்!
மாணவச் செல்வங்களே... உங்களது எதிர்காலத்தைத் திட்டமிட்டு வடிவமைத்துக் கொள்வதற்கான அடித்தளத்தை வலிமையாக அமைத்துக் கொள்ளுங்கள்! குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
மேல்நிலைக் கல்வி - தொழிற்கல்வி எனப் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. உங்களது பாதைக்கு வழிகாட்ட”நான்_முதல்வன்” உட்பட நமது அரசின் திட்டங்கள் உள்ளன. கல்வி எனும் அறிவாயுதம் உங்களுக்கு என்றென்றும் துணையாக அமையட்டும்! என பதிவிட்டுள்ளர். இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!