மேகதாது அணை விவகாரம்.. மத்திய மந்திரியைச் சந்தித்த சிவக்குமார்... நெருக்கமான ஸ்டாலின் என்ன செய்ய போகிறார்!

 
கர்நாடக சிவக்குமார் ஸ்டாலின்

பதவி ஏற்பு விழாவில், தமிழக  முதல்வர் ஸ்டாலினைக் கட்டிப் பிடித்து வரவேற்றார் கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார். தனி மெஜாரிட்டியுடன் ஜெயிக்கவே முடியாது என்று கணிக்கப்பட்ட அத்தனை ஆரூடங்களையும் தவிடு பொடியாக்கி, காங்கிரஸ் கட்சிக்கு கர்நாடகாவில் புத்துயிர் ஊட்டிய அரசியல் தலைவர். அதற்கான பரிசாக இப்போது கர்நாடகாவின் துணை முதல்வராகவும், அம்மாநில நீர்வளத்துறை அமைச்சருமாக அழகுப்படுத்தி பார்க்கிறார் கர்நாடக முதல்வர் சித்தராமையா.

இந்நிலையில், டிகே சிவக்குமார் மூன்று நாள் பயணமாக கடந்த புதன்கிழமை இரவு டெல்லி சென்றார். அங்கு நேற்று முன்தினம் மாலையில் மத்திய ஜலசக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, நிலுவையில் உள்ள கர்நாடகா நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து ஷெகாவத்துடன் சிவக்குமார் விவாதித்தார். குறிப்பாக, கர்நாடகா தமிழகம் இடையே நிலவும் மேகதாது அணை குறித்தும், கர்நாடகா கோவா இடையே நிலவும் மகதாயி அணை குறித்தும் விவாதித்தனர்.

மேகதாது அணை விவகாரத்தில் இருமாநிலங்கள் இடையே நிலவும் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று ஷெகாவத்திடம் சிவக்குமார் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

மேகதாது அணை உறுதியாக கட்டப்படும்! மீண்டும் சலசலக்கும் அரசியல் வட்டாரம்!

இது தொடர்பாக ஷெகாவத்துக்கு கடிதம் ஒன்றையும் சிவக்குமார் எழுதி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அந்த கடிதத்தில், "மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை நிலைப்பாடு எடுத்துள்ளது. தமிழக அரசு, காவிரி உபரி நீரையும், ஒகேனக்கல் 2வது கூட்டு குடிநீர் திட்டத்தையும் சட்டவிரோதமாக செயல்படுத்தி வருகிறது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அணை கட்டுவது தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கர்நாடக ஸ்டாலின் முதல்வர்

மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்தின் நீர்வரத்து பாதிக்கப்படுவதோடு விவசாயமும் பாதிக்கப்படும் என்பதால் தமிழக முதல்வர் முக்கிய முடிவை எடுக்க வேண்டும் என்கிறார்கள் தமிழக விவசாயிகள். இதற்கிடையே காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருக்கும் திமுகவிற்கு இது சரியான சந்தர்ப்பம்.  ஆகவே இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

காங்கிரஸ் கட்சியுடன் இன்னும் திமுக  கூட்டணியில் தான் இருக்கிறது. டெல்லிக்கே சென்று மூன்று தினங்கள் காத்திருந்து போராடி, தன்னுடைய மகளுக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கும் அளவுக்கு நெருக்கமானவராக இருந்துள்ளார் கலைஞர் கருணாநிதி. தமிழக முதல்வர் ஸ்டாலினும் இப்போது வரை காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடன் நெருக்கமாக சுமூக உறவு காத்து வருகிறார். இந்நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பதால், மேகதாது பிரச்சனைக்கு சுமூகமாக தீர்வு காண வேண்டும் என்பதும், நம் மாநில விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பற்றி பேசும் முதல்வர் ஸ்டாலின் கர்நாடகாவில் எப்படி சாதிக்கப் போகிறார் என்றும் தமிழக விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web