கூட்ட நெரிசல்.. ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்து பொறியியல் மாணவர் பலி!

 
ரயில் தற்கொலை

சேலம் அருகே டேனீஸ்பேட்டை-லோக்கூர் ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று நள்ளிரவு ரயில் தண்டவாளத்தில் 20 வயது இளைஞர் சடலமாக கிடந்தார். தகவல் கிடைத்ததும் சேலம் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபண்ணா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதையடுத்து போலீசார் இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த வாலிபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? போலீசார் விசாரணை நடத்தினர். இறந்தவர் திருப்பத்தூர் மாவட்டம், பத்தனவாடி கந்திலியைச் சேர்ந்த பிரகாசம் மகன் சக்திமகி (வயது 20) என்பது தெரியவந்தது. பிரகாசம் திருப்பத்தூர் மத்திய கூட்டுறவு வங்கியில் காசாளராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. மேலும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகின்றார்.

தற்கொலை

இந்நிலையில் சக்திமகி நேற்று மாலை கோவை-சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் (கார் எண் 12:76) முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் ஈரோட்டில் இருந்து ஜோலார்பேட்டைக்கு சென்றுள்ளார். மேலும் படிக்கட்டு அருகே சென்ற சக்திமகி கூட்ட நெரிசலால் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web