ஸ்டார்லைனர் கிளம்பியது... 3வது முறையாக விண்வெளி மையத்திற்கு புறப்பட்டார் சுனிதா வில்லியம்ஸ்!

 
சுனிதா வில்லியம்ஸ்
இரண்டு  முறை தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயணம் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவின் நாசாவில் இருந்து போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி மையத்தை நோக்கிப் புறப்பட்டது. புறப்பட்டது. இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் 3வது முறையாக விண்வெளி மையத்துக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

ஆனால், இந்த முறை முதல் முறையாக போயிங் நிறுவனம் வடிவமைத்திருக்கும் ஸ்டார்லைனர் விண்கலம் விண்வெளி பயணத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டார்லைனர் விண்கலத்தில் நாசா விண்வெளி வீரர் புட்ச் வில்மோர், விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டு சென்றனர். 


இதற்கு முன்பு புறப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இருமுறை தொழில் நுட்ப கோளாறு காரணமாக போயிங் ஸ்டார்லைனர் விண்கல பயணம் தடைபட்டது. தொழில் நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்ட நிலையில் நேற்று போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் அமெரிக்க கடற்படை கேப்டன் புட்ச் வில்மோர், சுனிதா வில்லியம்ஸை சுமந்து கொண்டு விண்வெளி நிலையம் நோக்கி புறப்பட்டது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து அட்லஸ்-வி ராக்கெட் மூலம் பயணம் மேற்கொள்கின்றனர். அட்லஸ்-வி ராக்கெட்டில் இரண்டு விண்வெளி வீரர்கள் அமர்ந்திருக்கும் ஸ்டார் லைனர் விண்கலம் தனியாக பிரிந்தது.

சுனிதா வில்லியம்ஸ்

25 மணி நேர பயணத்திற்குப் பிறகு இன்று ஜூன் 6ம் தேதி அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் ஒரு வாரம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வு மேற்கொண்டு ஜூலை 14-ம் தேதி பூமிக்கு திரும்புகிறார்கள்.

சுனிதா வில்லியம்ஸ் இதற்கு முன்னதாக இரண்டு முறை விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தற்போது 3-வது முறையாக பயணம் மேற்கொண்டுள்ளார். சுனிதா வில்லியம்ஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 3வது முறையாக விண்வெளிக்குப் பயணம் செய்பவர், கூடவே அதிக நாட்கள் விண்வெளி மையத்தில் தங்கியிருந்தவர் என்கிற சாதனைகளை சுனிதா வில்லியம்ஸ் படைத்துள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web