ஆர்எஸ்எஸ் உறுப்பினர் முதல் துணை பிரதமர் வரை... எல்.கே.அத்வானியின் அரசியல் பயணம்!

 
அத்வானி
 அத்வானி... இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத பெயராக இன்று வரை ஒலித்துக் கொண்டிருக்கிறது. பாஜக கட்சியின் தோற்றம், வளர்ச்சி... இன்று மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றிருக்கும் மோடியின் வளர்ச்சி என்று அனைத்திலும் அத்வானியின் பங்கு நிறையவே இருக்கிறது. பாஜக என்றால் என்ன என்று கூட தெரியாத இந்திய மாநிலங்களில் பாஜக பெயரை உச்சரிக்க செய்தவர் அத்வானி. அவரது ஆரம்ப கால அரசியல் வாழ்க்கை அத்தனை எளிதாக இல்லை.

அத்வானி
1927 நவம்பர் 8ம் தேதி பாகிஸ்தானின் கராச்சி நகரில் எல்.கே. அத்வானி பிறந்தார். 1942ல் தான் முதன்முதலில் அத்வானி ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்தார். அதன் பின்னர் 1944ல் கராச்சியில் உள்ள மாடல் உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியர் பணியில் இணைந்தார்.
இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது 1947ல் அத்வானியின் குடும்பம் பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து டெல்லியில் குடியேறியது. 1947 முதல் 1951 வரை ஆர்எஸ்எஸ் தொண்டராக தீவிரமாக பணியாற்றினார் அத்வானி.
1958-63-ம் ஆண்டுகளில் டெல்லி மாநில ஜன சங்கத்தின் செயலாளராகப் பதவி வகித்தார். அமைப்பில் அத்வானி வகித்த முதல் பதவி இது தான். இந்த பதவியில் துவங்கி நாட்டின் துணைபிரதமர் வரை உயர்ந்தார். 1960-67ம் ஆண்டுகளில் ஜன சங்க அரசியல் இதழில் உதவி ஆசிரியராக பணியாற்றினார். 1970ல் முதன்முறையாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1972-ல் பாரதிய ஜன சங்கத்தின் தலைவரானார். 1975-ம் ஆண்டு அவசரநிலை காலத்தில் பெங்களூருவில் அத்வானி கைது செய்யப்பட்டார்.

அத்வானி
அதன் பின்னர் 1977ம் ஆண்டு முதல் 1979ம் ஆண்டு வரை மத்திய தகவல், தொழில்நுட்ப அமைச்சராக பதவி வகித்தார். 1980-86ல் பாஜக பொதுச்செயலாளராக பதவி வகித்தார்.  1986, 1988-ம் ஆண்டுகளில் பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த கால கட்டத்தில் பாஜக இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் வே பரப்ப துவங்கியது. குறிப்பாக வடமாநிலங்களில் கிராமங்களில் கூட பாஜக பெயரை உச்சரிக்க துவங்கினார்கள். 1988-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். கடந்த 1990-ம் ஆண்டில் குஜராத்தின் சோம்நாத்தில் இருந்து அயோத்திக்கு ரத யாத்திரை மேற்கொண்டார்.  அத்வானியின் ரத யாத்திரை பாஜகவுக்கு புது ரத்தம் பாய்ச்சியது. பலரும் ஆர்வமாக பாஜகவில் உறுப்பினர்களாக இணைந்தனர். 1999 முதல் 2004-ம் ஆண்டு வரை மத்திய உள்துறை அமைச்சராக பணியாற்றினார். 2002 முதல் 2004-ம் ஆண்டு வரை துணை பிரதமராக பதவி வகித்தார். இந்த வருடத்தின் துவக்கத்தில் அத்வானிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கெளரவித்தது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!