பத்திரமா இருங்க... அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!
பத்திரமா இருங்க மக்களே இன்று முதல் அடுத்து வரும் 5 தினங்களுக்கு கேரளம் மற்றும் மகாராஷ்டிரம் கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகி இருக்கும் காரணத்தில் கேரளத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று ஜூலை 25ம் தேதி முதல் ஜூலை 27 ம் தேதி வரை கேரளத்தில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால், தாழ்வான மற்றும் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வடமேற்கு வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ள குறைந்தக் காற்றழுத்தப் பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களை நோக்கி நகரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் பருவமழை முன்கூட்டியே தொடங்கியது முதல், அம்மாநிலத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
