பெற்றோர்களே உஷார்... KFC சிக்கனில் ஸ்டீல் கம்பி, புழு! உயிருக்கே ஆபத்து!

 
 KFC சிக்கன்

சின்ன குண்டூசி தானே என்று ஒதுக்கி தள்ள முடியாது. சமயங்களில் உயிரையே காவு வாங்கும் அளவுக்கு சென்று விடும். எல்லோரும் ஸ்டைலாக நம்பி சென்று சாப்பிடும் பிரபல சிக்கன் உணவுகளைப் பரிமாறும் கே.எஃப்.சி. சிக்கனிலும் புழுக்கள் இருப்பதாகவும், ஸ்டீல் பின்கள் இருப்பதாகவும் பஞ்சாயத்து கிளம்பி, விசாரணை நடைப்பெற்று வருகிறது. கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் சுதாகர். பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் சிங்காநல்லூரில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள பிரபல கேஎப்சி சிக்கனில் தனது குழந்தைக்கு நான்கு வகையான சிக்கன்களை ஆன்லைனில் ஆர்டர் செய்தார். சிக்கனை சாப்பிடும் போது, அதில் இருந்த ஸ்டீல் கம்பியை பார்த்த குழந்தை தனது தாயிடம் அதனை காண்பித்துள்ளது. அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இது குறித்து பெங்களூருவில் உள்ள தனது கணவர் சுதாகருக்கு தகவல் தெரிவித்தார்.

சுதாகர் உடனடியாக அந்த KFC சிக்கன் உணவகத்தை தொடர்பு கொள்ள பலமுறை முயன்றார். ஆனால் அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை. உணவு விநியோக நிறுவனமான ஜூமோட்டோவிடம் புகார் அளித்துள்ளார். ஆர்டரின் பணத்தைத் திருப்பித் தருவதாக நிறுவனம் கூறியுள்ளது. அதை ஏற்க மறுத்த சுதாகர், உணவில் இருந்த கம்பியை புகைப்படம் எடுத்து அனுப்புமாறு மனைவி கூறியுள்ளார்.

சுதாகர் அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, k.f.c-ல் ஆர்டர் செய்யும் உணவை கொடுக்கும் போது கவனமாக இருக்குமாறு பெற்றோர்களை எச்சரித்துள்ளார். தற்போது அந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது இரண்டு குழந்தைகளும் வாந்தி, பேதியால் அவதிப்படுவதாகவும், மீதம் உள்ள சிக்கனைப் பார்த்தபோது அதில் புழுக்கள் இருப்பதையும் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி! 

From around the web