ரயில் மீது கல்வீச்சு... பயணிகள் ஆத்திரம்... அதிர்ச்சி வீடியோ.... !!

 
ரயில்

நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை சிறப்பாக கொண்டாடும் வகையில் இந்தியன் ரயில்வே பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை அறிவித்திருந்தது.  அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பீஹார் செல்லவும் சிறப்புரயில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த  ரயில் ரத்து செய்யப்பட்டதால் ரயில் மீது கற்களை எரிந்துள்ளனர் மக்கள். இந்த சம்பவம் பஞ்சாப் மாநிலம் சிர்ஹிந்தில் உள்ள ரயில் நிலையத்தில் நடைபெற்றுள்ளது.


 இந்த சிறப்பு ரயில் பாஞ்சாப் மாநிலம் பதேகாட் சாகிப் மாவட்டத்தில் உள்ள சிர்ஹிந்த் ரயில் நிலையத்தில் இருந்து பிஹார் மாநிலம் சஹர்சா பகுதிக்கு செல்ல இருந்தது. அதனால் ரயில் நிலையத்தில் மக்கள் ரயிலுக்காக காத்திருந்தனர். இந்நிலையில்  ரயில் ரத்தான தகவல் வெளியானது.  இதனையடுத்து  ரயில் நிலையத்தில்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீதும்,   நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரயில் மீது கற்களை எறிந்து தாக்கியுள்ளனர்.  


டிக்கெட் எடுத்தும் பயணிக்காத பயனர்களால்  கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக ரயில்வே நிர்வாகம் மீது பல தரப்பினர் விமர்சனம் மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே தீபாவளிக்கு முன் தினம் நவம்பர் 11ம் தேதி சனிக்கிழமை சூரத் நகரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web